சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த டிராக்டரில் தவறி விழுந்து 15 வயது சிறுவன் உயிரிழப்பு - போலீசார் விசாரணை!
பேரணாம்பட்டு ,மே 2
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த சின்னதாமல் செருவு பகுதியைச் சேர்ந்த ஹரிகுமார் (வயது 15 ) இவர் பேரணாம் பட்டு பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி உள்ளார்
இந்த நிலையில் இன்று காலை தனது நண்பருடன் ஹரிகுமார் டிராக்டரில் மணல் ஏற்றிக்கொண்டு லோகேஷ் என்பவர் டிராக்டரை ஓட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது.இதனிடையே வேகமாகச் சென்ற டிராக்டரில இருந்து நிலை தடுமாறி சாலையில் விழுந்த ஹரிக் குமார் பலத்த காயமடைந்தார இதனை எடுத்து அங்கிருந்தவர்கள் ஹரிகுமாரை பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலை யில் சிகிச்சை பலனின்றி ஹரிகுமார் உயிரிழந்தார் மேலும் இந்த சம்பவம் குறித்து பேரணாம்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
மணல் ஏற்றி வந்த டிராக்டரில் சென்ற பள்ளி மாணவன் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
குடியாத்தம் தாலுக்கா
செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக