ஸ்ரீவைகுண்டம். மே 9. தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது கருங்குளம். வகுளகிரி சேஷத்திரம் எனவும் சொல்லப்படுகிறது. அங்கு வீற்றிருக்கும் வெங்கடாசலபதி கோவில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் சித்ரா பௌர்ணமி உற்சவம் 10 நாட்கள் நடைபெறும்.
கடந்த மே 3 ந்தேதி கால் நாட்டப்பட்டது. நேற்று 5 ந் திருவிழாவை முன்னிட்டு கருடசேவை நடந்தது. காலை 6 மணிக்கு விஸ்வரூபம். பின்னர் 10 .15 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம். தீபாராதனை நடந்தது. தீர்த்தம். சடாரி.பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
மாலை 6 மணிக்கு சாயரட்சை. இரவு 7.30 மணிக்கு உற்சவர் சீனிவாசன் கரு மண்டபத்திற்கு எழுந்தருளி கருட வாகனத்தில் அர்ச்சகர் ராஜேஷ் அலங்காரம் செய்தனர். இரவு 10 மணிக்கு கருடசேவை நடந்தது. மே 12 ந்தேதி பொன்னிற சப்பரத்தில் மலை இறங்குதல் ஆகியவை நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர் ராஜேஷ். நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன். அறங்காவலர் குழுத் தலைவர் சின்னத்துரை.கல்யாணி. கருவேல முத்து. கள்ளப்பிரான் கோவில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி. ராமசுப்பன். சங்கர். சின்னக் கண்ணன் ஜோசியர் வெங்கடேஷ் சோசியர் கண்ணன். பாலாஜி.நடராஜன் வெங்கட்ராமன். மணிகண்டன். உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக