ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 29 ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தேரோட்டத்தை ன்னிட்டு அதிகாலையில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூபம் திருமஞ்சனம் தீர்த்த விநியோக கோஷ்டி நடைபெற்றது உற்சவர் காலை 7 05 மணிக்கு தேரில் எழுந்தருளினார்.
காலை 8 மணிக்கு கோவிந்தா கோபாலா கோஷத்துடன் தேர் வடம் பிடித்து இழுத்தனர். 10.45 மணிக்கு தேர் நிலைக்கு வந்தது. நிகழ்ச்சியில் எம்பெருமானார் ஜீயர் சுவாமிகள், அர்ச்சகர்கள் கண்ணன். விவேக். பாலாஜி. சுவாதி. கோவில் செயல் அலுவலர் சதீஷ்
அறங்காவலர் குழு தலைவர் ராமானுஜம்(எ) கணேசன். உறுப்பினர்கள் கிரிதரன் செந்தில் குமார் . காளிமுத்து.ராமலட்சுமி. கள்ளப்பிரான் கோவில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர் இன்று தீர்த்தவாரி நடைபெறுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக