இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று 08.05.2025 மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் பள்ளி வாகனங்களுக்கான கூட்டாய்வு நடைபெற்றது இக்கூட்ட ஆய்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத் சிங் கலோன், தலைமையேற்று பள்ளி வாகனங்களுக்கான கூட்டாய்வு பணியினை துவக்கி வைத்து பள்ளி வாகனங்களில் உட்கட்டமைப்பு வசதி மற்றும் செயல் திறன் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
2025- 2026 கல்வி ஆண்டுகள் இயங்கும் பள்ளி வாகனங்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசு சிறப்பு விதி 2012 இன்படி கடைபிடித்து இயக்க அறிவுறுத்தப்படுகிறது இராமநாதபுரம் மாவட்டத்தில் 69 தனியார் பள்ளிகளில் 549 பள்ளி பேருந்துகள் பள்ளி மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வர பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசு பள்ளி வாகன சிறப்பு விதி 2012 படி வருடத்திற்க்குகொரு முறை வருவாய்த்துறை, காவல்துறை, பள்ளி கல்வித்துறை மற்றும் போக்குவரத்து துறை ஆகியோர் இணைந்து பள்ளி வாகனங்களை கூட்டாய்வு செய்து பள்ளி வாகனங்களை சீரிய முறையில் இயக்க அறிவுறுத்தப்படுகிறது.
இதன்படி இன்று மாவட்டத்தில் உள்ள பள்ளி வாகனங்கள் நல்ல நிலையில் இயங்குகிறதா என பரிசோதிக்கப்பட்டு இந்த பள்ளி வாகன கூட்டாய்வில் வாகனத்தினுடைய உறுதி, டயர்கள், வாகன உட்புற தரைதளம், இருக்கைகள் மற்றும் வாகனத்துடைய அவசரகால கதவு, படிக்கட்டுகள் வாகனத்தின் பிரேக் திறன் அவசரகால பயன்பாட்டிற்கான தீயணைப்பு கருவி முதலுதவி பெட்டிகள் மருந்துகள் மற்றும் வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமரா நல்ல நிலையில் இயங்குகிறதா என சோதிக்கப்பட்டு இந்த சோதனைகள் குறைபாடுகள் உள்ள பள்ளி வாகனங்களில் தகுதி சான்றுகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு சீர் செய்த பின் இயக்கப்பட அனுமதி வழங்கப்படுகிறது.
மேலும் பள்ளி வாகனங்கள் தினந்தோறும் முழுமையாக பரிசோதிக்கப்பட்டு குறைவின்றி முறையாக பராமரித்து சீரிய முறையில் பள்ளி வாகனங்களை இயக்க மாவட்ட தனியார் பள்ளி வாகன உரிமையாளர் ஓட்டுநர்கள் மற்றும் பள்ளி பேருந்து நடத்தினார்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் பள்ளி பேருந்து நடத்தினார்கள் பள்ளி வாகனங்களை முறையாக பராமரித்து சீரிய முறையில் இயக்கும் இயக்கி விபத்தில் ஆண்டாக அமைந்திட ஒவ்வொரு ஓட்டுனரும் உறுதிமொழி ஏற்று அரசு வழிகாட்டுதலை கடைபிடித்து செயல்பட வேண்டுமென அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த், முதன்மை கல்வி அலுவலர் சின்னரசு, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் செந்தில்குமார், இராமநாதபுரம்) பத்மபிரியா (பரமக்குடி) மாவட்ட தீயணைப்பு அலுவலர் கோமதி அமுதா மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக