போதைப் பொருட்கள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்கும் நடவடிக்கை - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 16 மே, 2025

போதைப் பொருட்கள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்கும் நடவடிக்கை


ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.


அந்த வகையில், ஈரோடு டவுன் மதுவிலக்கு சப்- இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போலீசார், ஈரோடு ரெயில் நிலையத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அசாம் மாநிலம் திப்ருகரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் ரெயில் ஈரோடு ரெயில் நிலையத்தில் உள்ள நடைமேடையில் வந்து நின்றது.


அப்போது போலீசார் ஒவ்வொரு பெட்டியாக சோதனை மேற்கொண்டனர். பொதுப் பிரிவு பெட்டியில் போலீசார் சோதனை மேற்கொண்ட போது கழிவறை

அருகே கேட்பாரற்று கிடந்த 14 கிலோ

கஞ்சாவை போலீசார் பறிமுதல்

செய்தனர். இதனையடுத்து, அந்த

கஞ்சாவை கடத்தி வந்தது யார் என்பது

குறித்து போலீசார் விசாரணை நடத்தி

வருகின்றனர். சமீபகாலமாக ஈரோடு

வழியாக செல்லும் ரெயில்களில்

கஞ்சா கடத்தும் சம்பவம் அதிகரித்து

வருகிறது. இது அடுத்து ஈரோடு

ரெயில்வே போலீசார் உஷார்

படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில்

ஈடுபட்டு வருகின்றனர். ரெயில்

நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.

சி. டி. வி கேமரா காட்சிகளையும் ஆய்வு

செய்து வருகின்றனர்.


தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad