கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள இந்திரா நகரில் ஜெயப்பிரியா வித்யாலயா பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் நடந்து முடிந்த 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் தற்பொழுது வெளியாகி உள்ள நிலையில் இந்த பள்ளியில் பயின்று வரும் கூலி தொழிலாளியின் மகன் ஜசீர் அகமத் என்ற மாணவன் 500-க்கு 498-மதிப்பெண் பெற்றுள்ளான்.
மேலும் ஆங்கிலம், அறிவியல், சமூக அறிவியல் ஆகியவற்றில் 100/100 மதிபெண்கள் பெற்றுள்ளான். மேலும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவனை பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் இனிப்புகள் ஊட்டியும், சால்வை கேடயம் வழங்கியும் பாராட்டினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக