மேட்டுப்பாளையத்தில் கார் ஓட்டுநருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்து விபத்து!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கார் ஒன்று அன்னூர் சாயில் சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுனருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. இதனால் நிலை தடுமாறிய கார் அதிவேகமாக சென்று சாலை ஓரத்தில் சிறிய பாலத்தின்தடுப்புச் சுவற்றில் மோதி 10 அடிக்கு மேல் தூக்கி வீசப்பட்டு சுவற்றில் மோதிகவிழ்ந்ததுஇந்த விபத்தில் காரில் இருந்த மூவருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டது.அக்கம் பக்கத்தினர் உடனடியாக காரில் இருந்த மூவரையும் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக