தனியார் பள்ளியில் தமிழ்ச்சங்கம் சார்பாக "காலந்தோறும் முல்லை நில வாழ்வியல்" என்னும் நூல் வெளியீட்டு விழா ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 31 மே, 2025

தனியார் பள்ளியில் தமிழ்ச்சங்கம் சார்பாக "காலந்தோறும் முல்லை நில வாழ்வியல்" என்னும் நூல் வெளியீட்டு விழா !

தனியார் பள்ளியில் தமிழ்ச்சங்கம் சார்பாக "காலந்தோறும் முல்லை நில வாழ்வியல்"  என்னும் நூல் வெளியீட்டு விழா ! 
வாணியம்பாடி,மே 31 -

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஏலகிரி பாரதி தமிழ்ச்சங்கம் சார்பாக "காலந்தோறும் முல்லை நில வாழ்வியல்" என்னும் பொருண்மையில் தேசியக் கருத்தரங்கம் லிங்கண்ணமணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இணைய வழியில் நடைபெற்றது.  இந்நிகழ்விற்கு ஏலகிரி பாரதி தமிழ் சங்கத்தின் செயலா ளர் கவிதா தண்டபாணி தலைமை தாங் கினார் வழக்கறிஞர் யோகநாத் ஆசிரியர் சுந்தரகோபால் மற்றும் ஆசிரியர் அரிமா சங்கர் நல்நூலகர் ஜெ. விஜயகுமார் முன்னிலை வகித்தனர் பாரதி தமிழ்ச் சங்கத்தலைவர் பேராசிரியர் ப.சிவராஜ் அனைவரையும் வரவேற்றார். லிங் கண்ணமணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் டாக்டர் எல்.மணி அவர்கள் ஆய்வு நூலை வெளியிட நல்லாசிரியர் வெ. சுந்தரம் துணைத் தலைவர் பெ. தாமோதரன் இணைச் செயலாளர் மோகனா ஆகியோர் முதன்மை பிரதிகளை பெற்றுக் கொண்டனர்  கட்டுரையாளர்கள் இணைய வழியில் தம்முடைய கட்டுரைகளை சமர்பித்தார் பேராசிரியர் முனைவர் கா. கலைச் செல்வி வாழ்த்துரை வழங்கினார் நிகழ்வின் நிறைவாக நல்லாசிரியர் து. துரைமணி நன்றியுரை  கூறினார்  நிகழ்ச்சியை சின்னபையன் தொகுத்து
வழங்கினார்.

 செய்தியாளர் மோ.அண்ணாமலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad