இந்தியன் சாய் சிலம்பக் கழகம் இணைந்து பெருமையுடன் நடத்தும் மாபெரும் உலக சாதனை முயற்சி! மாணவ மாணவிகள் அசத்தல்!
திருப்பத்தூர் ,மே 31 -
திருப்பத்தூரில் ஐந்தாவது முறையாக நம் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட் டான சிலம்பத்தின் பெருமையை இந்த உலகிற்கு பறைசாற்றும் வகையிலும் உலக சிலம்பம் தினத்தையும் மற்றும் தேசிய விளையாட்டை கொண்டாடும் வகையில் ஒரு மாபெரும் உலக சாதனை முயற்சி திருப்பத்தூர் டோமினி சேமியா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது
மேலும் சென்னை கீழ்ப்பாக்கம் டான் போஸ்கோ கலைக்கல்லூரியில் நடை பெற்ற ஓபன் சாம்பியன்ஷிப் போட்டியில் திருப்பத்தூர் மாவட்டத்திலிருந்து 22 மாணவர்கள் கலந்து கொண்டு அதில் ஒன்பது மாணவ மாணவிகள் டபிள்யு எஸ் எம் ஏ அவார்ட் விருது பெற்றார்கள்
பின்பு மாஸ்டர் ராஜசேகர் தலைமையில்
யூனியன் செல் அச்சுவேர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் 72 மாணவர்கள் கலந்து கொண்டு உலக சாதனை செய்தார்கள்
இதில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிலம்பம் யோகா ஆகிய தற்காப்பு கலைகளை சிறந்த முறையில் செய்து சாதனை படைத்தனர்
சாதனை புரிந்த அனைத்து மாணவர் களுக்கும் பரிசுகள் மற்றும் கேடயம் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் மண்டல செயலாளர் இரா.சுபாஷ் சந்திரபோஸ் தயாசேகர் டாக்டர் .அருள்திலீப் டாக்டர் .மணி முதல்வர் சன்மதி மற்றும் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பாக கொண் டாடினர்.
செய்தியாளர் மோ.அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக