தாராபுரத்தில் சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு அரசு மருத்துவமனை முன்பு பேரணி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 30 மே, 2025

தாராபுரத்தில் சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு அரசு மருத்துவமனை முன்பு பேரணி.


திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் சர்வதேச புகையிலை முன்னிட்டு பொன்னாபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக வட்டார மருத்துவர் திருமதி தேன்மொழி தலைமை வகித்து கொடியசைத்து வைத்து விழிப்புணர்வு பேரணியை துவங்கி வைத்தார், இந்தப் பேரணி அரசு மருத்துவமனையில் துவங்கி, வட்டார வளர்ச்சி வளாகம் சாலை, காவல் நிலைய வீதி வழியாக சென்று  பழைய நகராட்சி வளாகம் அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் வந்தடைந்தது. இந்தப் பேரணியில் மருத்துவ அலுவலர் பிலிப் பாஸ்கர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வடிவேல், சுகாதார ஆய்வாளர்கள் நவீன், தனபால் மேலும் 50க்கும் மேற்பட்ட பொது சுகாதார களப்பணியாளர்கள் பலர் கலந்து கொண்டு பதாகை ஏந்தி புகையிலை எதிர்ப்பு குறித்து கோசமிட்டு பேரணி சிறப்பித்தனர்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad