நில அளவைக்கு லஞ்சம் வாங்கிய கிராம அலுவலர் தலையாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 11 மே, 2025

நில அளவைக்கு லஞ்சம் வாங்கிய கிராம அலுவலர் தலையாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

நில அளவைக்கு லஞ்சம் வாங்கிய கிராம அலுவலர் தலையாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

 ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா நில அளவை செய்வதற்கு ரூபாய் 3500 லஞ்சம் வாங்கிய கிராம அலுவலர் நைனா முகமது,மற்றும் தலையாரி சித்ரா ஆகியோர், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா பெருவாக்கோட்டையை சேர்ந்த ஒருவர் அவரது நிலத்தை அளப்பதற்காக பனிச்சகுடி குரூப் கிராம அலுவலரை அணுகியுள்ளார். அதற்கு வி.ஏ.ஒ.,ரூபாய் 4000 லஞ்சம் கேட்டதாகவும் அவர் ரூபாய் 3500 தருவதாகவும் பேரம் பேசப்பட்டதாக தெரிகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத நில உரிமையாளர் ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தில் புகார் செய்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தழுவிய ரூபாய் நோட்டுகளை மே 8 ல் பெருவார்கோட்டை கிராமத்தில் உள்ள வி.ஏ.ஓ.,அலுவலகத்தில் தலையரி சித்ராவிடம் கொடுத்துள்ளார். இதை மறைந்திருந்து பார்த்த ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையான போலீசார் கிராம அலுவலர் நைனா முகமது, தலையாரி சித்ரா ஆகியோரை கைது செய்தனர். 

கிராம அலுவலரை இராமநாதபுரம் ஆர்.டி.ஓ. ராஜமனோகரன்., சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். தலையாரியை திருவாடானை தாசில்தார் ஆண்டி சஸ்பெண்ட் செய்தார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad