மானாமதுரை சித்திரை திருவிழா - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 11 மே, 2025

மானாமதுரை சித்திரை திருவிழா

 


மானாமதுரை சித்திரை திருவிழா திருத்தேரோட்டத்தின் போது சிலம்ப கலை நிகழ்வில் ஈடுபட்ட வீரவிதை விளையாட்டு மற்றும் தற்காப்பு கலைகளின் அறக்கட்டளை சேர்ந்த மாணவர்கள்.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஶ்ரீ ஆனந்தவல்லி - சோமநாதர் ஆலயத்தில் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வரும் நிலையில், விசுவாவசு வருடம் சித்திரை 25ஆம் தேதி ஶ்ரீ ஆனந்தவல்லி - சோமநாதர் 'திருக்கல்யாணம்' நடைபெற்றதை தொடர்ந்து, சித்திரை 26ஆம் தேதி 'திருத்தேரோட்டம்' ஶ்ரீ ஆனந்தவல்லி - சோமநாதர் ஆலயத்தை சுற்றியுள்ள நான்கு தேரோடும் வீதிகளில் வெகு விமரிசையாக நடைபெற்றது.


இத்தேரோட்டத்தின்போது பிரத்யேகமாக மானாமதுரையில் இயங்கி வரும் 'வீரவிதை விளையாட்டு மற்றும் தற்காப்பு கலைகளின் அறக்கட்டளையின்' தலைவர் மாஸ்டர் கலைவளர்மணி டாக்டர் திரு கே. பெருமாள் அவர்கள் தலைமையில் அறக்கட்டளையில் பயிற்சி பெறும் மாணவர்கள் 'சிலம்ப கலை நிகழ்வில்' ஈடுபட்டனர். இந்நிகழ்வில் மானாமதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பக்தகோடி பெருமக்கள் பெரும் திரளாக கலந்துகொண்டு தேரின் வடம் பிடித்து இழுத்து தங்களின் பிரார்த்தனை மற்றும் வழிபாட்டை மேற்கொண்டனர். 


இந்நிகழ்வுகளை தொடர்ந்து சித்திரை 29ஆம் தேதி ஶ்ரீ கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபோகம் மற்றும் சித்திரை 30ஆம் தேதி நிலாச்சோறு நிகழ்வும் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad