திருமண மண்டபத்தில் அனைத்து அரசியல் கட்சிகள் - சமூக இயக்கங்கள்,அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் நடத்திய,மாபெரும் கூட்டம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 24 மே, 2025

திருமண மண்டபத்தில் அனைத்து அரசியல் கட்சிகள் - சமூக இயக்கங்கள்,அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் நடத்திய,மாபெரும் கூட்டம்.


இன்று பொள்ளாச்சி லாரி அசோசியேசன் திருமண மண்டபத்தில் அனைத்து அரசியல் கட்சிகள் - சமூக இயக்கங்கள்,அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் நடத்திய,மாபெரும் கூட்டம். 


பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு,அதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பும்,பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிவாரணத்தொகை வழங்கிய,தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு தளபதியார் அவர்களுக்கும் தமிழக அரசுக்கும் பாராட்டு விழா நடைபெற்றது.


கூட்டத்தில் முனைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் அவர்கள்.  கலந்துகொண்டு தீர்ப்பின் மாண்பினை பாராட்டியும்,போராடிய மாதர் சங்கங்களுக்கும்,அரசியல் கட்சிகளுக்கும்,பொதுநல அமைப்புகளுக்கும்,என்றும் பெண்களின் பாதுகாவலராக நிற்கும் தமிழக முதல்வருக்கும் எனது நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து உரையாற்றினார். 


அகில இந்திய  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் துணை தலைவர் திருமதி. பி. சுகந்தி அவர்கள், சி.பி.ஐ (எம்) அரசியல் தலைமை குழு உறுப்பினர் திருமதி. உ.வாசுகி அவர்கள், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மாநில பொதுச் செயலாளர் திருமதி. அ. ராதிகா அவர்கள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் மாவட்ட செயலாளர் திரு. குகன் மில் செந்தில் அவர்கள், சி.பி.எம். கட்சி நிர்வாகி திரு. மூ. அன்பு அவர்கள், விடுதலை சிறுத்தை கட்சி மண்டல பொறுப்பாளர் திரு. ச. பிரபு அவர்கள், காங்கிரஸ் கட்சி நிர்வாகி திரு. அ. செந்தில்குமார் அவர்கள், தந்தை பெரியார் திராவிட கழகம் நிர்வாகி திரு. இரா. மனோகரன் அவர்கள், தந்தை பெரியார் திராவிடக் கழக நிர்வாகி திரு. பழ. அசோக் அவர்கள், பணிக்கம்பட்டி சரவணன் மற்றும் மாதர் சங்க நிர்வாகிகள், அனைத்து அரசியல் கட்சி,சமூக இயக்கங்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி சிறப்பித்தார்கள்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad