பந்தலூர் அருகே அத்திச்சால் பழங்குடியினர் கிராமத்தில் இலவச பொது மருத்துவம் முகாம் நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 25 மே, 2025

பந்தலூர் அருகே அத்திச்சால் பழங்குடியினர் கிராமத்தில் இலவச பொது மருத்துவம் முகாம் நடைபெற்றது.

 


பந்தலூர் அருகே அத்திச்சால் பழங்குடியினர் கிராமத்தில் இலவச பொது மருத்துவம் முகாம் நடைபெற்றது.


இந்திய செஞ்சிலுவை சங்கம் இல்லம் தேடி மருத்துவம், கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், ஆல் தி சில்ட்ரன், லேர்ன்னிங் லிங்க்ஸ் பவுண்டேஷன் ஆகியன இணைந்து நடத்திய பொது மருத்துவ முகாமிற்க்கு கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் செயலாளர் சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார் 


ஆல் தி சில்ட்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித், லார்ன்னிங் லிங்க்ஸ் பவுண்டேஷன் சமூக ஒருங்கிணைப்பாளர் ஆனந்தகுனா, சரன்குமார், நுகர்வோர் மைய நிர்வாகி இந்திராணி, பழங்குடியினர் கிராம தலைவர் கைமதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் சார்பில்

மருத்துவர் அன்சாரி தலைமையில் 

மருந்தாளுணர்

தௌபீக், செவிலியர் சுமதி, நிர்வாக உதவியாளர்கள் 

லாய்ஷான் ஆகியோர் அடங்கிய மருத்துவ  குழுவினர் பொது மருத்துவ சிகிச்சை அளித்தனர்.


முகாமில் 60க்கு மேற்பட்ட பழங்குடியினர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.  குறிப்பாக இரத்தத்தை சர்க்கரை கண் சம்பந்தமான நோய்களுக்கு முதன்முறையாக மருத்துவ ஆலோசனை பெற்றதும் குறிப்பிடத்தக்கது. அனைவருக்கும் பரிசோதனைகள் இலவச மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad