நேரடி நெல் கொள்முதல் பாலேகுப்பம் ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் செய்ய கட்டிடம் கட்ட நிலம் தேர்வு!
குடியாத்தம் , மே 4 -
விவசாயிகளிடம் திறந்த வெளியில் நேரடியாக நெல் கொள்முதல் செய்வதால் மழை காலங்களில் மிகவும் சிரமத்திற் கும், பாதிப்புக்குள்ளாகும் நிலையில் நெல் மூட்டைகள் மழையால் நனைந்து விவசாயிகளுக்கு பொருட்சேதமும் பொருளாதார நஷ்டமும் ஏற்படுவதால் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு சொந்தமாக கட்டிடம் ஏற்படுத்தி தர மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெறும் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் முப்பெரும் உழவர் பெருந்தலைவர் விவசாயிகள் சங்கம் வேலூர் மாவட்ட தலைவர் மற்றும் வேலூர் மாவட்ட உற்பத்தியாளர் மற்றும் குறை தீர்வுகுழு உறுப்பினர் சரகுப்பம் மு.சேகர் தலைமையிலான வேலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து வைத்த கோரிக்கையின் பயனாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் உத்தரவின்படி தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபம் கழகம், நேரடி நெல் கொள்முதல் நிலையம் கட்டிடம் கட்ட தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களு க்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டி 03/05/2025 சனிக்கிழமை இன்று நில அளவையர் மூலம் கள ஆய்வும், அளவீடும் செய்து வரைபடத்துடன் அறிக்கை தயாரிக்கும் பணி மேற் கொள்ளப்பட்டது. தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபம் கழகம், வேலூர் துணை மண்டல மேலாளர் யுவராஜ், கொள்முதல் அலுவலர் பாஸ்கரன் பாலேகுப்பம் கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ்பாபு, கிராம உதவியாளர் ஜெயலட்சுமி, பாலேகுப்பம் ஊராட்சி செயலாளர் பிரபு, முப்பெரும் உழவர் பெருந்தலைவர் விவசாயிகள் சங்கம் குடியாத்தம் ஒன்றிய செயலாளர் மற்றும் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தி தொடர்பாளர் கோப்பம்பட்டி மோ.பழனி வேலன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள், அலுவலர்கள் உடன் இருந்தனர். மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையிலான மாவட்ட நிர்வாகத்திற்கு விவசாயிகள் மற்றும் முப்பெரும் உழவர் பெருந்தலைவர் விவசாயிகள் சங்கம் வேலூர் மாவட்ட உற்பத்தியாளர் மற்றும் குறை தீர்வுகுழு உறுப்பினர் மற்றும் முப்பெரும் உழவர் பெருந்தலைவர் விவசாயிகள் சங்கம் வேலூர் மாவட்ட தலைவர் சரகுப்பம் மு.சேகர் அவர்கள் தலைமையிலான மாவட்ட நிர்வாகம் சார்பில் நெஞ்சம் நிறைந்த நன்றிகள் தெரிவித்துக் கொள்கிறோம்.
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக