செம்பனார்கோவிலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் மிசா பி. மதிவாணன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு செம்பனார்கோவில் வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் தலைமை வகிக்க, முக்கிய தலைவர்கள் பலர் முன்னிலையாக இருந்தனர். அவர்களில் மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலன், சீர்காழி எம்.எல்.ஏ. பன்னீர்செல்வன், முன்னாள் எம்.எல்.ஏ. குத்தாலம் கல்யாணம், மயிலாடுதுறை நகர மன்ற தலைவர் செல்வராஜ், தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுண சங்கரி குமரவேல், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், துணைத் தலைவர் பாஸ்கரன், ஒன்றிய செயலாளர்கள் அப்துல் மாலிக், அமுர்த விஜயகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.
முக்கிய விரிவாக, மயிலாடுதுறை திமுக மாவட்ட செயலாளர் மற்றும் பூம்புகார் எம்.எல்.ஏ. நிவேதா முருகன் பங்கேற்று, மிசா மதிவாணனின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து 500 மாற்றுத்திறனாளிகளுக்கு சத்து மாவுப் பெட்டகம், 10 மாணவர்களுக்கு தலா ரூ.2000 கல்வி உதவித்தொகை, மேலும் 2 மாணவர்களுக்கு முழு கல்வித் தொகை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மயிலாடுதுறை எம்.எல்.ஏ. ராஜகுமார், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், அருட்செல்வம், சித்திக், விஜயபாலன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் 1000க்கும் மேற்பட்டோருக்கு மதிய உணவு பரிமாறப்பட்டது. மிசா பி. மதிவாணன் அவர்கள், ஒருங்கிணைந்த செம்பனார்கோவில் திமுக ஒன்றிய செயலாளராக 30 ஆண்டுகள் சேவை புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியினை மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் பி.எம். ஸ்ரீதர் மற்றும் குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக