ஈரோடு ,மே 4 -
ஈரோடு மொடக் குறிச்சியில் குமரகுரு வேளாண் கல்லூரி மாணவிகள் நடத்திய விவசாய கண்காட்சி குமரகுரு வேளாண் கல்லூரியின் பெண் மாணவிகள், கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி புதன்கிழமை மொடக் குறிச்சி கிராமத்தில் உள்ள விவசாயி களுக்காக ஒரு பயனுள்ள மற்றும்விழிப்பு ணர்வூட்டும் விவசாய கண்காட்சியை சிறப்பாக நடத்தியனர். இந்நிகழ்வு, நவீன வேளாண் நுட்பங்களைப் பின்பற்றுவதன் மூலம் பயிர் உற்பத்தியை அதிகரிக்கவும், இயற்கை சார்ந்த பயிர் பாதுகாப்பு முறை களை விரிவுபடுத்தவும் தன்னார்வமாக முன்னெடுக்கப்பட்டது.கண்காட்சியின் போது மாணவிகள் விவசாயிகளிடம் நுணூட்டச்சத்து பற்றிய முக்கியத்துவத் தை எடுத்துரைத்தனர். பயிர்களில் உண்டாகும் ஊட்டச்சத்து குறைபாடுகளை எளிதில் அடையாளம் காணும் முறைகள், அதன் அறிகுறிகள் மற்றும் அந்த குறை பாடுகளை சரிசெய்ய தேவையான நுணூட்டச்சத்து உரங்களை எவ்வாறு வழங்க வேண்டும் என்பதையும் விவரித் தனர். ஒவ்வொரு பயிருக்கும் ஏற்ற வகையில் தரமான மாதிரிகள் மற்றும் விளக்கப்படங்களுடன் விவசாயிகளுக்கு தெளிவான புரிதலை வழங்கினர்.
மேலும், உயிரணு உரங்களின் பங்கு, அவை நிலத்தில் நுண்ணுயிர் வாழ் வியலை மேம்படுத்துவதில் செய்யும் பங்களிப்பு, பயிர்களின் வேர்வடிவேற்றத் திறனையும் உற்பத்தி திறனையும் அதிகரிக்கக் கூடிய திறன்கள் குறித்து மாணவிகள் விவரித்தனர். இந்த உரங் கள் இயற்கை மற்றும் சூழலுக்கு சேதம் இல்லாமல் பயிர் வளர்ச்சியை மேம் படுத்தும் என்பதை அவர்கள் வலியுறுத் தினர்.விவசாயத்தில் பூச்சி மற்றும் களை மேலாண்மை ஒரு முக்கிய சவாலாக உள்ள நிலையில், மாணவிகள் பல்வேறு வகையான பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகள் குறித்த தகவல் களையும் அவற்றை எப்போது, எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை தெளி வாக கூறினர். தவறான நேரத்தில் அல்லது அதிக அளவில் பூச்சிக்கொல்லி களைப் பயன்படுத்தும் போது பயிர் களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இந்த கண்காட்சியின் சிறப்பு அம்சமாக, மரவள்ளிக்கிழங்கு செட் சிகிச்சை மற்றும் Trichoderma viride என்ற பயனுள்ள பூஞ்சையை பயன் படுத்தி விதை சிகிச்சை செய்யும் நடைமுறை விளக்கம் நேரில் காட்சி மூலம் வழங்கப்பட்டது. இந்த செய்முறை காணொளிக்காட்சி, விவசாயிகளின் கவனத்தைக் ஈர்த்தது. அவர்கள் பலர், இதுபோன்ற நடைமுறை அறிவுரைகள் தங்கள் பணிக்கேற்ப மிகவும் பயனுள் ளதாக இருக்கும் என்று தெரிவித்தனர்.
இந்த நிகழ்வின் முடிவில், விவசாயிகள் பலரும் DEPO (தொகுப்புக் கிடங்கு) மூலம் மானியத்தில் கிடைக்கும் உயிரணு உரங்கள், தரமான விதைகள் மற்றும் வேப்பெண்ணெய்களை வாங்கினர். இந்த நிகழ்வு தங்களுக்குப் புதிய அறிமுகங்களையும், நம்பிக்கையையும் அளித்தது என விவசாயிகள் மகிழ்ச் சியுடன் தெரிவித்தனர். குமரகுரு வேளாண் கல்லூரி மாணவிகள், தங்களது கல்வித் திறனையும், சமூகப் பொறுப்பையும் ஒருங்கிணைத்து இப்படியான விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்துவது பாராட்டத்தக்கது. எதிர்காலத் தில் மேலும் பல கிராமங்களில் இத் தகைய பயனுள்ள நிகழ்வுகளை நடத்தக் கூடிய முனைப்பும், ஆர்வமும் மாணவி களில் இருந்தது மிகவும் குறிப்பிடத் தக்கது.
தமிழக குரல் சிறப்பு செய்தியாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக