நெமிலி அருகே சித்தேரி ஊராட்சியில் புதிய அங்கன்வாடி மையம் பெ. வடிவேலு திறந்து வைப்பு!
ராணிப்பேட்டை ,மே 19 -
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சித்தேரி ஊராட்சிக்குட்பட்ட இருளர் பகுதியில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பு விழா, ஊராட்சி மன்ற தலைவர் கலைஞ்செழியன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர். அன்பரசி அவர்கள் முன்னிலை வகித்தார் இதில் சிறப்பு அழைப்பாளராக நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ.வடிவேலு அவர்கள் கலந்து கொண்டுபுதிய அங்கன் வாடி மையத்தினை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், ஒன்றிய குழு உறுப்பினர் E.சுப்பிரமணி, ஒன்றிய அவைத்தலைவர் A.புருஷோத் தம்மன் ஊராட்சி மன்ற துணை தலைவர் தனசேகரன், ஊராட்சி செயலாளர். ரமேஷ், மு.ஒன்றிய கவுன்சிலர் ஜெகதா சின்னப்பா மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், பொதுமக்கள் மற்றும் திமுக கழகத்தினர் திரளானோர் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் மு. பிரகாசம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக