குடியாத்தத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன்
திருவிழாவை முன்னிட்டு ஆலோசனைக் கூட்டம்
குடியாத்தம் ,மே 3 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோபால புரம் கவுண்டன்னிய மகா நதியில் அமை ந்துள்ள அருள்மிகு கெங்கையம்மன் வைகாசி தேர் திருவிழாவை முன்னிட்டு ஆலோசனை கூட்டம் வருவாய் கோட்டா ட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது
கூட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுப்புலட்சுமி தலைமை தாங்கி னார் வட்டாட்சியர் மெர்லின் ஜோதிகா முன்னிலை வகித்தார் நேர்முக உதவியா ளர் ரமேஷ் வரவேற்றார் இதில் சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜியன் கலந்து கொண்டார் கூட்டத்தில் தேர் செல்லும் சாலைகளில் உள்ள மரக்கிளை களை வெட்டி அப்புறப்படுத்தி மேடு பள்ளங்களை சீர் செய்வது என்றும் தடையில்லா மின்சாரம் வழங்குவது குறித்தும் கண்காணிப்பு கேமராக்களை வைத்து சிரசு திருவிழாவின்போது நெரிசலை தவிர்க்க ஒரு வழி பாதை மற்றும் தற்காலிக பஸ் நிலையம் அமைப்பது உள்ளிட்ட ஏற்பாடு செய்து குறித்து ஆலோசிக்கப்பட்டது தேர் அன்று மாலைக்குள் நிலைக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது நகராட்சி மூலம் பக்தர்கள் வசதிக்காக ஆங்காங்கேகுடிநீர் சின்டெக்ஸ் டேங்க் வைத்து பொது மக்களுக்கு குடிநீர் விநாயகர் செய்ய வேண்டும் என்றும் ஆலோசனைக் கப்பட்டது ஆலோசனைக் கூட்டத்தில் துணை காவல் கண்காணிப்பாளர் ராமச் சந்திரன் போக்குவரத்து காவல் ஆய்வா ளர் முகேஷ் குமார் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் இளஞ்செழியன் பொதுப்பணித்துறை உதவி நகர அமை ப்பு அலுவலர் சீனிவாசன் செயற்பொறி யாளர் பன்னீர்செல்வம் தீயணைப்பு நிலைய அலுவலர் மகேந்திரன் அறநிலைத்துறை செயல் அலுவலர் செல்வகுமார் ஆலய நிர்வாகிகள் ஆர். ஜி எஸ் கார்த்திகேயன் கிழக்கு வருவாய் ஆய்வாளர் அசோக்குமார் நகர கிராம நிர்வாக அலுவலர் வெங்கடாஜலபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக