திருப்பூர் மாவட்டத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தாள் கொண்டாட்டம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 13 மே, 2025

திருப்பூர் மாவட்டத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தாள் கொண்டாட்டம்



அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் 71-வது பிறந்தநாளை  முன்னிட்டு நேற்று காலை  உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலை  அமணலிங்கேஸ்வரர் கோவிலில் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் சி. மகேந்திரன் எம்.எல்.ஏ தலைமையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.இந்நிகழ்வில் மாணவர் அணி மாவட்ட செயலாளர்  தேவராஜ், ஒன்றிய கழக செயலாளர்கள் உடுமலை தெற்கு போகநாதன், உடுமலை மேற்கு  கரிச்சிக்குமார், உடுமலை வடக்கு  செழியன், விவசாய அணி ஒன்றிய செயலாளர்  நடப்பன் (எ) திருமூர்த்தி, தளி பேரூர் கழக செயலாளர்  ராமலிங்கம் கழக நிர்வாகிகள்,தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். அதனையடுத்து தாராபுரத்தில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. தாராபுரம் கனரா வங்கி அருகே தொடங்கிய போட்டிக்கு தாராபுரம் நகர இளைஞர், இளம் பெண்கள் பாசறை செயலாளர் சதீஷ், மாவட்ட இளைஞர், இளம் பெண்கள் பாசறை செயலாளர் சிவசுகந்தன் ஆகியோர் தலைமை தாங்கினர். தாராபுரம் நகர கழக செயலாளர் சி.ராஜேந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற இந்த போட்டி  பொள்ளாச்சி ரோடு,பூக்கடை கார்னர்,டி.எஸ் கார்னர்,பழைய ஆற்றுப்பாலம்,5 கார்னர்,தாலுகா அலுவலகம்,காவல் நிலையம் வழியாக அலங்கியம் ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் வந்து முடிவடைந்தது.அங்கு நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் சி. மகேந்திரன் எம்.எல்.ஏ

தலைமை தாங்கி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். 



அதை தொடர்ந்து மண்டபத்தின் முன்பு மாவட்ட செயலாளர் சி.மகேந்திரன் விடியா தி.மு.க அரசை வீட்டிற்கு அனுப்பவும், எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நல்லாட்சி மலர்ந்திட பாடுபடுவோம் என சபதம் ஏற்று புறாக்களை பறக்க விட்டார். இதில் மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவர் பழனிகுமார், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் சின்னமணி என்கிற மோகன்ராஜ், தாராபுரம் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் ரமேஷ்,குண்டடம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் செந்தில்குமார், அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாவட்ட செயலாளர் பங்க் மகேஷ் குமார்,   அம்மா பேரவை பொருளாளர் அரசகுமாரன்,  கொளத்துப்பாளையம் பேரூர் கழக செயலாளர் பைப்ரவி, மாவட்ட மகளிர் அணி செயலாளர் ரேவதி குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து தாராபுரம் துர்க்கை அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் சி.மகேந்திரன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார்.திண்டுக்கல் முன்னாள் மேயர் மருதராஜ் முன்னிலை வகித்தார்.  இதற்கான ஏற்பாடுகளை வர்த்தக அணி மாவட்ட செயலாளர் கோல்டன் ராஜன் செய்திருந்தார்.

இதில் மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் எஸ்.டி. நாகராஜ், வி.நாட்ராயன், இலக்கிய அணி செய லாளர் மாதவன், நகர வர்த்தக அணி செயலாளர் ஸ்டுடியோ கார்த்தி, அம்மா பேரவை செயலாளர் கே.என். ராமசாமி, நகர துணைச் செயலாளர் செல்வி உட்பட பலர் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து தாராபுரம் அடுத்த மணக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட தேர் பட்டியில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் பி. கே ராஜ்,தாராபுரம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அதில் 50-க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் அ.தி.மு.கவில் தங்களை இணைத்துக் கொண்டனர். அதன் பின்னர் அங்குள்ள ராகவேந்திரா முதியோர் இல்லத்தில் உள்ள முதியவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் தேர்பட்டி ஆதி செய்திருந்தார். 

வெள்ளகோவிலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமியின் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று  திருப்பூர் மாநகர் மாவட்ட இளைஞர் இளம் பெண்கள் பாசறையின் சார்பில் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.

    இந்த முகாமில் திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். இதில் காங்கேயம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.எஸ்.என்.நடராஜ், வெள்ளகோவில் அதிமுக ஒன்றிய செயலாளர் எஸ்.என்.முத்துக்குமார், முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஆர்.வெங்கடேச சுதர்சன், அதிமுக நகர செயலாளர் டீலக்ஸ் ஆர். மணி, முன்னாள் நகர் மன்ற தலைவர் வி.கந்தசாமி, திருப்பூர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் எம். எஸ். அருண்குமார், மாவட்ட கழக துணைச் செயலாளர் லட்சுமி, நகர் மன்ற உறுப்பினர் நாச்சிபாளையம் ராம் குமார், ஒன்றிய எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர்  கண்ணுசாமி  உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த முகாம் ஏற்பாடுகளை திருப்பூர் மாநகர் மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறையின் செயலாளர் வி.கே.கண்ணுசாமி செய்திருந்தார்.இதுபோன்று திருப்பூர், பல்லடம்,காங்கேயம்,அவிநாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் அ.தி.மு.க வினர் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad