அகில இந்திய மக்கள் மனிதநேய கழகம் சார்பில் எட்டாம் ஆண்டு துவக்க விழா நலத்திட்ட உதவிகள் அன்னதானம் வழங்கல்!
பேரணாம்பட்டு,மே 11 -
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில், அகில இந்திய மக்கள் மனிதநேய கழகம் சார்பில் 8 ஆம் ஆண்டு துவக்க விழா முன்னிட்டு, தண்ணீர் பந்தல் திறப்பு விழா, நலதிட்ட விழா மற்றும் அன்ன தானம் வழங்கும் விழா நடைபெற்றது வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு தாலுகா, பேரணாம்பட்டு பேருந்து நிலையம் அருகில், அகில இந்திய மக்கள் மனிதநேய கழகம் சார்பில் 8 ஆம் ஆண்டு துவக்க விழா முன்னிட்டு, நிறுவனத் தலைவரும் சமூக ஆர்வலரு மான AMB. Dr. M.C. சக்திவேல் ஆலோச னைக்கிணங்க, தண்ணீர் பந்தல் திறப்பு விழா, நலதிட்ட விழா மற்றும் அன்ன தானம் வழங்கும் விழா மாநிலச் செயலா ளரும் சமூக ஆர்வலருமான ஆ. அங்கா ளன் (எ) கோடீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தலைமை செயற்குழு உறுப்பினர் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றி தண்ணீர் பந்தலை திறந்து வைத்து, குடிநீர், மோர், பழங்கள் மற்றும் அன்னதானம், அரிசி உள்ளிட்ட நலதிட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தனர். இதனைத் தொடர்ந்து மாநில செயலாளர் அங்காளன் என்கின்ற கோடீஸ்வரன் சிறப்பு அழைப்பாளர்களுக்கும், சிறப்பு விருந்தினர்களுக்கும், பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினர்களாக ஒருங்கி ணைந்த மாவட்ட தலைவர் Amb. டாக்டர். ராஜ்பாபு, மாவட்ட செயல் தலைவர் சின்னத்தம்பி, மாவட்ட மகளிர் அணி தலைவர் சரண்யா, மாவட்ட மாணவரணி தலைவர் பரத், தொழிலதிபர் சுரேந்தர், கே எல் எப் மேனேஜர் சுதாகரன், சாதனா பவுண்டேஷன் நிறுவனத் தலைவர் பெருமாள், குடியாத்தம் நகர மன்ற தலைவர் பி வெங்கடேசன், பேர்ணாம் பட்டு நகர செயலாளர் கார்த்திக், நகர துணை தலைவர் சோபன்பாபு, மாவட்ட துணை தலைவர் ரவி, ராமு, குடியாத்தம் சமூக ஆர்வலரும் மூத்த செய்தியாளரு மான கேவி ராஜேந்திரன், ஆகியோர் கலந்துகொண்டு இந்த தண்ணீர் பந்தல் திறப்பு விழா மறசெய்தியாக நலதிட்ட வழங்கும் விழாவை சிறப்பித்தனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக