23.5.2025 வெள்ளிக்கிழமை மாலை 3:30 மணி அளவில், அதிமுக ஈரோடு மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சருமான கே.வி.இராமலிங்கம், கழக அமைப்புச் செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் பள்ளி, கல்வித்துறை அமைச்சர்ருமான செங்கோட்டையன், கழக அமைப்புச் செயலாளர், நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் மின்சார துறை அமைச்சருமான தங்கமணி, ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சருமான கே.சி.கருப்பண்ணன், சங்க பொதுசெயலாளரும், ஈரோடு மாநகர் மாவட்ட எம் ஜி ஆர் மன்றச் செயலாளருமான கே.எஸ்.தென்னரசு, மத்திய சங்கத் தலைவர் விஜயகுமார், அண்ணா தொழிற்சங்க மாநகர் மாவட்ட தலைவர், மத்திய சங்க செயலாளருமான மாது என்கிற ஆர்.மாதையன் துவக்கி வைக்க
![]() |
ஈரோடு மாவட்ட சுமை தூக்குவோர், மத்திய சங்க நிர்வாகிகள், அனைத்து கிளை சங்க பொறுப்பாளர்களும் கலந்துகொண்டு ஈரோடு வ.உ. சிதம்பரனார் பூங்காவில் தொடங்கி சத்தி ரோடு, பிருந்தா வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, திரு வெங்கடசாமி வீதி வழியாக பன்னீர் செல்வம் பூங்கா புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி, பேரறிஞர் அண்ணா, அண்ணல் அம்பேத்கர் ஆகியோர் சிலை அமைந்துள்ள ரவுண்டானாவில் ஊர்வலத்தை நிறைவுற்றனர்.
தமிழக குரல் இணையதள செய்தியாளர் செ.கோபால், ஈரோடு.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக