காரைக்குடியில் பாஜக சார்பில் சிந்தூர் மூவர்ணக்கொடி பேரணி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜக சார்பில் சிந்தூர் மூவர்ணக் கொடி பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
பஹல்காமில் அப்பாவி மக்களை சுட்டுக்கொலை செய்த பயங்கரவாதிகளின் மீது நடவடிக்கையாக இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையில்
பயங்கரவாதிகளின் ஒன்பது முகாம்களை அழித்ததில்
வெற்றி கண்ட நம் ராணுவ வீரர்களுக்கும், வெற்றிக்கு வித்திட்ட பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக, சிந்தூர் மூவர்ணக் கொடி ஏந்தி காரைக்குடி தேவர் சிலையிலிருந்து தொடங்கியது. இப்பேரணியை சிவகங்கை மாவட்ட பாஜக தலைவர் டி. பாண்டித்துரை, முன்னாள் தலைவர் மேப்பல் சத்தியநாதன், ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பிரமாண்டமான மூவர்ணக் கொடியினை பெண்கள் ஏந்தியும், ஆண்கள், சிறுவர்கள் கைகளில் மூவர்ணக் கொடியினை ஏந்தியும் நடைபெற்ற இப் பேரணியானது காரைக்குடி நூறடிச்சாலை, பெரியார் சிலை, செக்காலைச் சாலை வழியாக ஐந்து விளக்குப் பகுதியில் நிறைவடைந்தது.
இப்பேரணியில் பாஜக மாவட்டப் பொதுச் செயலாளர் ஏ. நாகராஜன், மாவட்ட துணைத்தலைவர் எஸ்.வி. நாராயணன், நகர, ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகள், பாஜக இளைஞரணி, மகளிரணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக