நாசரேத் திருமறையூர் மறுரூப ஆலயத்தில் பனை ஓலையில் கைவினைப் பொருட்கள் மற்றும் அலங்கார பொருட்கள் செய்யும் பயிற்சி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 17 மே, 2025

நாசரேத் திருமறையூர் மறுரூப ஆலயத்தில் பனை ஓலையில் கைவினைப் பொருட்கள் மற்றும் அலங்கார பொருட்கள் செய்யும் பயிற்சி.

நாசரேத் திருமறையூர் மறுரூப ஆலயத்தில் பனை ஓலையில் கைவினைப் பொருட்கள் மற்றும் அலங்கார பொருட்கள் செய்யும் பயிற்சி நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சிக்கு ஆரம்பமாக திருமறையூர் சேகர தலைவர் ஜான் சாமுவேல் ஆரம்ப ஜெபம் செய்து அனைவரையும் வரவேற்றார். இப் பயிற்சியை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதன்மை மண்டல மேலாளர் லட்சுமி நரசிம்மன் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். 

அகப்பைகுளம் சேகர தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார். நாசரேத் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாளர் அமல் பனை ஓலை பொருட்களின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். தமிழ்நாடு பனை நல வாரிய உறுப்பினரும் மும்பை போதகருமான காட்சன் சாமுவேல் பயிற்சி அளித்தார். 

இந்நிகழ்ச்சியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் விற்பனை மேலாளர் அழகுவேல், திருமறையூர் திருச்சபையின் திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் ஜெயபால், தேவதாஸ் சேகர செயலர் ஜான்சேகர், ஆசீர் ஜெயசிங் துரைராஜ், ஜீவன், பாக்கியராஜ் ஆலய பணியாளர் ஆபிரகாம், ஜோயல், நாசரேத் பிலீப் ஜெயசிங் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்ச்சியில் காட்சன் சாமுவேல் அவர்கள் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் அவர்களுக்கு பனை ஓலையில் செதுக்கப்பட்ட அன்னை தெரேசா அவர்களின் உருவத்தை பரிசாக வழங்கினார். 

நிகழ்ச்சியின் இறுதியில் ஜான் சாமுவேல் நன்றியுரை வழங்கினார் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருமறையூர் சேகர தலைவர் ஜான் சாமுவேல் திருச்சபை மக்களோடு இணைந்து செய்திருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad