தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு புரத சிற்றுண்டி வழங்கும் பணியை அமைச்சர் பி.கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்.
அரசு மருத்துவமனைகளில் தினமும் டயாலிசிஸ் சிகிச்சை பெற நோயாளிகள் பலர் வந்து செல்கிறார்கள். அவர்களுக்கு புரத சிற்றுண்டிகள் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் தினசரி 22 பேர்களுக்கு இரண்டு முட்டை 100 மில்லி பால் 25 கிராம் கொண்டக்கடலை வழங்கும் நிகழ்ச்சியை அரசு மருத்துவமனை முதல்வர் சிவக்குமார் தலைமையில் அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளரிடம் கூறியதாவது : வருகிற ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அன்று மாணவ மாணவிகளுக்கு இலவச புத்தகம் சீருடைகள் வழங்கப்பட உள்ளது. இதுபோல் இந்த ஆண்டு முதல் அங்கன்வாடி மையத்தில் புத்தகம் சீருடைகள் வழங்கப்பட உள்ளது. மாவட்டம் முழுதும் ஒரு லட்சத்து 55 ஆயிரம் குழந்தைகளுக்கு சீருடைகள் தயார் நிலையில் உள்ளன.
தமிழ்நாட்டில் 54,000 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளில் 6500 அங்கன்வாடி மையங்கள் கழிப்பறை வசதியுடன் புதிதாக கட்டப்பட்டு உள்ளது. இதில் குழந்தைகளுக்கு புரியும் வகையில் சித்திரங்கள் சுவர்களில் வரையப்பட்டுள்ளன. பள்ளிகளில் மாணவ மாணவிகள் அதிகரிக்கும் வகையில் காலை உணவு திட்டம் வழங்கப்பட்டு வருகிறது இதனால் மாணவ மாணவிகள் உற்சாகத்துடன் அரசு பள்ளிகளுக்கு வந்து சேர்கிறார்கள்.
முன்பெல்லாம் ஆண்டுக்கு மூன்று தடவை குழந்தைகள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். தற்போது அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் காலை உணவு திட்டத்தின் மூலம் பல சத்தான பொருட்கள் சாப்பிடுவதால் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளனர். இதனால் பெற்றோர்கள் நாங்கள் எங்களது குழந்தைகளை அழைத்துக் கொண்டு இப்போது மருத்துவமனைக்கே செல்வதில்லை என்று கூறி வருகிறார்கள்.
இதனால் நடப்பு ஆண்டு முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் தொடங்கப்பட உள்ளது வருகிற ஜூன்2ம் தேதி காலை திட்டம் தொடங்கி வைக்கப்பட உள்ளது என்றார். பேட்டியின் போது அரசு மருத்துவமனை உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி, திமுக மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், பகுதி செயலாளர் ரவீந்திரன், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக