நெமிலி அருகே தக்கோலம் கூட்ரோட்டில் நான்காண்டு திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் அமைச்சர் ஆர்‌. காந்தி பங்கேற்பு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 10 மே, 2025

நெமிலி அருகே தக்கோலம் கூட்ரோட்டில் நான்காண்டு திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் அமைச்சர் ஆர்‌. காந்தி பங்கேற்பு!

நெமிலி அருகே தக்கோலம் கூட்ரோட்டில் நான்காண்டு திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் அமைச்சர் ஆர்‌. காந்தி பங்கேற்பு!
ராணிப்பேட்டை ,மே 10 -

இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி மத்திய  ஒன்றிய திமுக சார்பில் நான் காண்டு திமுக கழக அரசின் சாதனை விளக்க மாபெரும் பொதுக்கூட்டம் தக் கோலம் கூட்ரோடு அருகில் நடைபெற்றது இதில் நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர்.SGC.பெருமாள் அவர்கள் தலைமையில், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர். சுந்தராம்பாள் பெருமாள் அவர்கள் முன்னிலையில், ஒன்றிய நிர்வாகிகள் பா.செ.நரசிம்மன், ஏ. சீனி வாசன், சாவித்திரி, சுந்தரவடிவேல்,  சி.ஜி. சண்முகம்க.தே.தனசேகரன் ஜெ.தசரதன்  வழக்கறிஞர் ஏ. ஜானகிராமன், SRB ரமேஷ் ஆகியோர் வரவேற்பில் திமுக  பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சரும் இராணிப் பேட்டை மாவட்ட திமுக செயலாளருமான ஆர்.காந்தி அவர்கள் கலந்து கொண்டு பேசினார். தலைமை கழக பேச்சாளர். நெல்லிக்குப்பம் வி. ஆர்த்தி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். இதில் மாவட்ட இளைஞர் அணிஅமைப்பாளரும், ஆற்காடு சட்டமன்ற உறுப்பினருமான
ஜெ.எல். ஈஸ்வரப்பன்,தக்கோலம் தலை வரும், பேரூராட்சி செயலாளருமான
எஸ். நாகராஜன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வி.எஸ். முரளி, வழக்கறிஞர் Y.பாபு மற்றும் திமுக கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இறுதி யாக மாவட்ட பிரிதிநிதி கே.சுரேஷ் நன்றி கூறினார்.

ராணிப்பேட்டை மாவட்ட 
செய்தியாளர் மு. பிரகாசம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad