பில்லூர் அணையில் இருந்து நீர் திறப்பு- மேட்டுப்பாளையத்தில் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 27 மே, 2025

பில்லூர் அணையில் இருந்து நீர் திறப்பு- மேட்டுப்பாளையத்தில் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு

 


பில்லூர் அணையில் இருந்து நீர் திறப்பு- மேட்டுப்பாளையத்தில் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு..


தொடர் மழை காரணமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள பில்லூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் பவானி ஆற்றில் வெள்ளம் கரைப்பிரண்டு ஓடுகிறது. இந்நிலையில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் மேட்டுப்பாளையம் பவானி ஆற்று பகுதியில் முன்னேச்சரிக்கையாக நடவடிக்கைகள் குறித்து மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையம் அமுதா, வட்டாட்சியர் ராம்ராஜ், நகர மன்ற தலைவர் மேஹரியா பர்வீனஅஷ்ரப் அலி உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad