தமிழகத்தில் ஜூன் 2-ல் பள்ளிகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு அனைத்து மாணவர்களுக்கும் ஜூன் 2 பள்ளிகள் திட்டமிட்டபடி திறக்கப்படும். என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2 தேதி பள்ளிகளை திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளி கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது .முதலமைச்சரின் காலை உணவு திட்டம் அனைத்து மாணவர்களுக்கும் தரமாகவும் ,தாமதமின்றியும் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். மதிய உணவு இடைவேளை முடிந்துசிறார் பருவ இதழ் படிக்க வைக்க வேண்டும்.மாணவர்களுக்கு பள்ளி வளாகத்தை தூய்மை செய்வது. வாரம் ஒரு முறை நன்னெறி வகுப்பு நடத்த வேண்டும். செவ்வாய்க்கிழமைகளில் 6-12 வகுப்பினருக்கு போதைப்பொருள் எதிர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் போன்ற நெறிமுறைகளை வலியுறுத்தியுள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக