தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்தநாள் விழாவினை சிறப்பாக கொண்டாட வேண்டும்
கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் வடலூரில் உள்ள மங்கையர்க்கரசி திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. கழகத் தேர்தல் பணிக்குழு செயலாளர் இள.புகழேந்திதலைமை தாங்கினார். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரும் கழக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் சிறப்புரை ஆற்றினார்.
இதில் கலைஞர் 102 வது பிறந்தநாள் விழாவினை ஜூன் மூன்றாம் தேதி முதல் ஒரு மாதம் வரை கடலூர் கிழக்கு மாவட்டத்தில் கழகக் கொடியேற்றி மருத்துவ முகாம்கள் இரத்த தானம் செய்தல் என மாநகர நகர ஒன்றிய பேரூர் ஊராட்சிகளில் சிறப்பாக கொண்டாட வேண்டும்,தலைமை கழகத்தின் தொகுதி பார்வையாளர்களுடன் இணைந்து ஒவ்வொரு வாக்குச்சாவடிகளும் உள்ள வாக்காளர்களை நியமிக்கப்பட்டுள்ள பி எல் ஏ பி எல் சி யினருடன் தொடர்ந்து சந்தித்து சாதனை துண்டறிக்கைகளை கொடுத்து விளக்குவது,2026 சட்டமன்றத் தேர்தலில் கடலூர் கிழக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெற வேண்டும்,அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வத்தின் செயல் திறனை பாராட்டி 8 மாவட்டங்களுக்கு மண்டல பொறுப்பாளராக பணியாற்ற வாய்ப்பு அளித்த தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
உறுப்பினர்கள் சேர்க்கை முழுமைப்படுத்துதல், வாக்குச்சாவடி குழு அமைப்பது, தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடத்துவது.
கழக ஆக்கப்பணிகள் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தமிழக குரல் செய்திகளுக்காக கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தே.தனுஷ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக