தி.மு.க வில் இணைந்த முன்னாள் பா.ஜ.க மாவட்ட தலைவர் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 17 மே, 2025

தி.மு.க வில் இணைந்த முன்னாள் பா.ஜ.க மாவட்ட தலைவர்



கோவை மேட்டுப்பாளையத்தில் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்,தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்,திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் ஆகியோர் முன்னிலையில் பா.ஜ.க-வின் திருப்பூர் தெற்கு மாவட்ட முன்னாள் தலைவர் மங்களம் ரவி தி.மு.கவில் இணைந்தார்


அவருடன் முன்னாள் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கார்த்திகேயன், முன்னாள் தாராபுரம் நகரத் தலைவர் விநாயகா சதீஷ், தகவல் தொழில் நுட்ப அணி வினீத் குமார், வெள்ளக்கோயில் சசிகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் தங்களை தி.மு.க வில் இணைத்துக் கொண்டனர்.இதில் தாராபுரம் ஒன்றிய கழக செயலாளர் செந்தில்குமார்,நகர கழக செயலாளர் முருகானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad