பந்தலூர் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நீலகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், மகாத்மா காந்தி பொது சேவை மையம், ஆல் தி சில்ட்ரன் ஆகியன சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் செயலாளர் சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.
மகாத்மா காந்தி பொது சேவை மையம் தலைவர் நௌசாத் கணினி பயிற்சி மைய முதல்வர் எபிநேசர், ஆங்கில பேச்சாற்றல் பயிற்சி மைய முதல்வர் ரஞ்சன்விக்னேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தார்.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர்கள் தவமணி, கோமதி, ஆல் தி சில்ட்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் உள்ளிட்டோர் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பேசும்போது 18 வயதிற்கு உட்பட்டவர்கள் குழந்தைகள் என சட்டம் வரையறுத்து உள்ளது. இவர்களுக்கு வாழ்வு, கல்வி, விளையாட்டு, பங்கேற்பு, என பல்வேறு உரிமைகள் உள்ளன. குழந்தைகள் பாதுகாப்பு என்பது முக்கியம், குழந்தை தொழிலாளர், பாலியல் வன் கொடுமைகள், குழந்தை திருமணம், துன்புறுத்தல்கள் உள்ளிட்டவை அவர்களின் வாழ்க்கையை திசைமாற்றி விடுகிறது. குழந்தைகள் காதல் வலையில் சிக்கி பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. படிக்கும் வயதில் கல்வியை முக்கியமாக கருதி படிக்க வேண்டும் பெற்றோர் வழிகாட்டலை பின்பற்ற வேண்டும் என விளக்கம் அளித்தனர்.
பந்தலூர் ரெப்கோ வங்கி கிளை மேலாளர் விஸ்வநாதன் பேசும்போது ரெப்கோ வங்கி மூலம் 10, 11, 12ம் வகுப்புகளில் 400, 500 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த மாணவர்களுக்கு ஊக்கதொகை வழங்கப்படுகிறது. அதுபோல் உயர்கல்வி படிக்கும் தாயகம் திரும்பிய மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது மேலும் செல்வமகன், செல்வமகள், முதியோர் உள்ளிட்டோருக்கு பல்வேறு சேமிப்பு திட்டங்கள் அதில் வழங்கும் நலத்திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.
நிகழ்ச்சியில் கணினி பயிற்சி மற்றும் ஆங்கில திறன் மேம்பாட்டு பயிற்சி பெறும் மாணவ மாணவிகள் இளைஞர்கள் பலர் பங்கேற்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக