சிவகங்கை ரயில்வே ஸ்டேஷன் சாலையில் உள்ள வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில் இயங்கி வரும் பாலின வள மையத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள்.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் பாலின வள மையம்/ வானவில் மையமானது சிவகங்கை மாவட்டம் சிவகங்கை ரயில்வே ஸ்டேஷன் சாலையில் உள்ள வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது. இதில் "இலவச சட்ட ஆலோசனை குழுவிற்கு பரிந்துரை செய்தல், குழந்தை திருமணத்தை தடை செய்தல், குடும்ப வன்முறை பிரச்சினைகளுக்கு காவல்துறை உதவியுடன் தீர்வு காணுதல், குடும்ப வன்முறை பிரச்சினைகளுக்கு ஆலோசனை வழங்குதல், பாலியல் வன்கொடுமைக்கு எதிரான அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுத்தல், பெண்களுக்கான சொத்துரிமை தொடர்பான சட்ட ஆலோசனை வழங்குதல், தகுதியான மகளிர்க்கு பிறதுறைகள் மூலம் தேவைப்படும் உதவிகள் வழங்குதல், மருத்துவ சேவை உதவிகள் வழங்குதல், இடைநிற்றல் மாணவிகளை கண்டறிந்து அவர்களை பள்ளியில் சேர உதவுதல்" உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகிறது. எனவே சிவகங்கை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மேல்குறிப்பிட்ட சேவைகள் மற்றும் உதவிகள் தேவைப்படுவோர் அனைவரும் பயன்படுத்திக்கொண்டு பயன்பெறுமாறு பொதுநலன் கருதி பாலின வள மையத்தின் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக