வேலூரில் தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கத்தின் மாநில பிரதிநிதித்துவ பேரவை! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 25 மே, 2025

வேலூரில் தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கத்தின் மாநில பிரதிநிதித்துவ பேரவை!

வேலூரில் தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கத்தின் மாநில பிரதிநிதித்துவ பேரவை!
வேலூர், மே 25 -
 
வேலூர் மாவட்டம் தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கத்தின் மாநில பிரதிநிதித்துவ பேரவை கூட்டம் இன்று வேலூர் காட்பாடி பிடிஎம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு மாநில தலைவர் வே.விஜயகுமரன் தலைமை தாங்கினார். முன்னதாக வரவேற்பு குழுத்தலைவரும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவருமான  தெ.தே.ஜோஷி வரவேற்றுப் பேசினார். மாநில பொதுச் செயலாளர் உ.சண்முகம் வேலை அறிக்கை சமர்ப்பித்து பேசினார் மாநில பொருளாளர் ச.ஹேமலதா வரவு செலவு அறிக்கை சமர்ப்பித்து பேசினார்.மாநில துணைத்தலைவர்கள் மா.சகாதேவன், க.பைரவநாதன், பெ.ராஜராஜன் மாநில அமைப்புச் செயலாளர் ஆ.விஸ்வேஸ் வரன் மாநில செயலாளர்கள்தே.வேந்தன் கொ.அ.பசுபதி, ந.சுப்பையா கு.பாஸ்கரன் சு.ராமநாதகணேசன், மு.ஆனந்தவல்லி, பெ.வல்லவன் க.இளங்கோ கா பெருமாள் ப.சுகுமார் மாநில தணிக்கையாளர்கள் செ.கிருஷ்ணமூர்த்தி மு.ரமேஷ்ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்து வழி மொழிந்து பேசினர் சிறப்பு அழைப் பாளராக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு பாஸ் கரன் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார் தமிழ்நாடு அரசு அனைத் துறை ஓய்வூதியர் சங்க மாநில பொதுச் செயலாளர் பி.கிருஷ்ணமூர்த்தி, ஜாக்டோ ஜியோ பேரமைப்பின் மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநிலத்தலைவர் செ.நா.ஜனார்த் தனன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் அ.சேகர், செயலாளர் எம்.எஸ்.தீனதயாளன் தமிழ்நாடு அரசு மருந்தாளுநர்கள் சங்க மாநில செயலாளர் தே.வேந்தன், வேலூர் மாவட்ட தலைவர் க.சண்முகன், செயலா ளர் பி.ஜீவநாதன் பொருளாளர் வி.ரமேஷ் குமார் மற்றும் தமிழகம் முழுவம் இருந்து  36 மாவட்டங்களை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர். 
மாநில பிரநிதித்துவ பேரவையொட்டி  அரசு மருந்தாளுநர் குரல் சிறப்பிதழை மாநிலத்தலைவர் வே.விஜயகுமரன் வெளியிட்டார்.பின்னர் பின்வரும் நிர்வாகிகள்   தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மாநிலத் தலைவராக மாநில பொதுச் செயலாளராக மாநில பொருளாளராக 
மாநில துணைத்தலைவர்கள் மாநில செயலாளர்கள் என புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தமிழ்நாடு மருத்துவத்துறை நிர்வாக ஊழியர் சங்க மாமநிலத்தலைவர் கோ.வெங்ககோ பராவ் தமிழ்நாடு அரசு அனைத்து மருந் தாளுநர் சங்க மேனாள் பொதுச் செயலா ளர்கள் ஆ.கிருஷ்ணமூர்த்தி, ம.தேவேந் திரன், அ.பால்முருகன், மேனாள் மாநிலத் தலைவர்கள் வீ.கோவிநதராஜ், மு.சுப்பிர மணியன்,  மருத்துவ ஆய்வக நுட்பனர் சங்க மாநில பொதுச்செயலாளர் த.ஏழு மலை, தமிழ்நாடு செவிலியர்கள் மேம் பாட்டு சங்க மாநில பொதுச்செயலாளர் நே.சுபின், கிராம சுகாதார செவிலியர் சங்க மாநிலத்தலைவர் தே.புனிதா, கண் மருத்துவ உதவியாளர்கள் சங்க மாநிலத்தலைவர் கோ.சேகர் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
பின்வரும்  கோரிக்கை தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
1. மக்கள் நலன் கருதி (நோயாளர் நலன் கருதி) 700க்கும் மேற்பட்ட மருத்ளுநர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்புதல் வேண்டும்.
2.புதிய பென்சன் திட்டத்தினை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
3.மக்கள் தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவ விதி தொகுப்பின் படி கூடுதல் மருந்தாளுநர் பணியிடங்களை உருவாக்கிட வேண்டும்.
4.நோயாளிகளின் எண்ணிக்கை, புதிய மக்கள் நலத்திட்டங்களுக்கு ஏற்றவாரும் மருந்து மற்றும் அறுவை சிகிச்சை பொருட்களின் விலையேற்றத்திற்கு ஏற்ற அரசு மருத்துவமனைகளுக்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
5.தொகுப்பூதியம் மற்றும் மதிப்பூதியம் முறையினை களைந்து காலமுறை ஊதியத்தில் பணியிடங்களை உருவாக்க வேண்டும்.
6.46 துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகங்களில் தடுப்பூசி மருந்துகள் மற்றும் மருந்துகளை பராமரித்து விநியோகம் செய்திட தலைமை மருந்தாளுநர் பணியிடங்கள் உருவாக்கிட வேண்டும்.
7.385 வட்டார மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆராம்ப சுகாதார நிலையங்களில் மருந்தக கண்காணிப்பாளர் மற்றும் கூடுதலாக மருந்தாளுநர் பணியிடம் உருவாக்க வேண்டும்.
8.39 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை வாய்பு அலுவலகம் மூலம் முறையாக பணி நியமனம் செய்யப்பட்ட மருந்தாளுநர்களை அரசாணையின் படி பணிவரன் முறைப்படுத்த வேண்டும்.
மாநில பிரநிதித்துவ பேரவையின் அறைகூவல் தீர்மானங்கள் 
1. ஜுன் 26 மற்றும் 27 ஆகிய நாட்களில் தமிழ்நாடு முழுவதும் மருந்தாளுநர்கள் மருந்துக் கிடக்கு அலுவலர்கள் அனைவரும் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிவது  மற்றும் 27.06.2025 கோரிக்கை மனுக்களை மாண்புமிகு முதலமைச்சர், மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மற்றும் இயக்குநர்களுக்கு கோரிக்கைகளை அனுப்புவது.  
பின்னர் 24.07.2025 அன்று மாவட்ட தலைநகரங்களில் கோரிக்கைக்கான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும்
2.09.07.2025 அன்று நடைபெற உள்ள அகில இந்திய வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்பது 
3.18.09.2025 அன்று சென்னை டிஎம்எஸ் அலுவலக வளாகத்தில் பெருந்திரள் முறையீடு இயக்கம் நடத்துவது.
ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. முடிவில் வேலூர் மாவட்டத் தலைவர் சு.சண்முகம் நன்றி கூறினார்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad