பாலியல் சமத்துவம் பெண்களுக்கு அதிகாரம் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழித்தல் குறித்து விழிப்புணர்வு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 24 மே, 2025

பாலியல் சமத்துவம் பெண்களுக்கு அதிகாரம் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழித்தல் குறித்து விழிப்புணர்வு!

பாலியல் சமத்துவம் பெண்களுக்கு அதிகாரம் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழித்தல் குறித்து விழிப்புணர்வு! 
ராணிப்பேட்டை ,மே 24 -

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பாலியல் சமத்துவம் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழித்தல் குறித்து மாவட்ட அளவிலான விழிப் புணர்வு நிகழ்ச்சியை சென்னை உயர் நீதிமன்ற நீதி அரசர் நிர்மல் குமார் அவர்கள் தொடங்கி வைத்தார் சென்னை உயர்நீதிமன்ற நீதி அரசர்  நிர்மல் குமார் அவர்கள் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு மகாலட்சுமி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் பாலினம் சமத்துவம் பெண்களுக்கு. அதிகாரம் அளித்தல் மற்றும் பெண் களுக்கு எதிரான வன்முறைகள் ஒழித் தல் குறித்து மாவட்ட அளவிலான விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து உரையாற்றினார்கள்.
இந்நிகழ்ச்சி ராணிப்பேட்டை மாவட்ட நீதி பதி செல்வம் அவர்கள் மற்றும் தலைமை குற்றவியல் நடுவர் பாலகிருஷ்ணன்  ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
 ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் சந்திரகலா, மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக  கலந்து கொண்டனர்.இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்டத் தின் நீதிபதிகள் வழக்கறிஞர்கள் நீதித் துறை பணியாளர்கள், பிற துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

தமிழக குரல் சிறப்பு செய்தியாளர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad