*திருநெல்வேலி மாவட்டம்* *பேட்டை, ரகுமான் பேட்டை,திருப்பணிகரிசல்குளம் ஆகிய பகுதிகளில் கொட்டும் மழையில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. LKG தொடங்கி பன்னிரண்டாம் வகுப்பு வரை ஆங்கிலம் மற்றும் தமிழ் வழி இரு பாலர் கல்வி வகுப்புகள் நடைபெறுவதையும்,
அரசு பள்ளிகளில் பயில்வதனால் மாணவர்களுக்கு ஏற்படுகின்ற நன்மைகளும் விளக்கி கூறப்பட்டது. அரசினுடைய எண்ணிலடங்கா சலுகை திட்டங்கள், தனி பயிற்சி வகுப்புகள் குறித்தும் அரசு பள்ளிகளில் படிப்பதனால் வேலை மற்றும் உயர் கல்விகளில் குறிப்பிட்ட சதவிகித இட ஒதுக்கீடு பெறுவது குறித்தும் விளக்கப்பட்டது.*
*நிகழ்விற்கு அரசு பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்களான பேட்டை நூலக வாசகர் வட்ட தலைவர் வழக்கறிஞர் மதார் முகைதீன் தலைமை தாங்கினார்,ஜமாத் தலைவர் முகையதின் முன்னிலை வகித்தார்,*
*பேட்டை*
*காமராஜர் மேல்நிலைப்பள்ளி* *பொருளாதார ஆசிரியர்* *பொன்னுசாமி,*
*ரகுமான் பேட்டை* *நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுப்ரமணியன் ஆகியோர் அரசு* *பள்ளிகள் குறித்து விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினர்,*
*நேசம் கல்லூரி அனிபா சாகிப்,முகம்மது யூசுப்,பள்ளிவாசல் மேலாளர் சாகுல் ஹமீது உட்பட பலர் கலந்து கொண்டனர்.*
*சுமார் 500க்கும் மேற்பட்ட நபர்களை சந்தித்து விழிப்புணர் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக