வடலூரில் திரு அருட்பா இசை விழா - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 26 மே, 2025

வடலூரில் திரு அருட்பா இசை விழா

வடலூரில் திரு அருட்பா இசை விழா

 
வடலூர் சத்திய ஞான சபையில் சத்திய தர்மசாலை 159வது தொடக்க விழாவை முன்னிட்டு 40வது திருஅருட்பா இசை விழா நேற்று தொடங்கியது.


வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் திரு அருட்பா இசை சங்கம் சார்பில் ஆண்டு தோறும் மே மாதம் மூன்று நாட்கள் இசை திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா நேற்று காலை 7 மணிக்கு மங்கல இசை உடன் தொடங்கியது.


காலை 8.30 மணிக்கு இசைச்சங்க செயலாளர் டாக்டர் அமுதவடிவு விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.மதியம் 2 மணிக்கு கருங்குழிக்கு கிஷோர், கனகசபை, பாண்டுரங்கன் குழுவினர் வில்லுப்பாட்டு  ‌திருமுறை இசை கலாநிதி சம்பந்தம் இசை நிகழ்ச்சி நடந்தது.


தொடர்ந்து இரவு 7.00 மணிக்கு திரைப்பட பின்னணி பாடகர் கலைமாமணி டாக்டர் வேல்முருகன்
10 .15 மணிக்கு மழையூர் சதாசிவம் இசை நிகழ்ச்சி நடந்தது. இன்று இரண்டாம் நாள் இசை விழாவும், நாளை மூன்றாம் நாள் இசை விழாவும் நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை திருஅருட்பா இசை சங்கத்தினர் செய்திருந்தனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தே.தனுஷ்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad