ஏலகிரி மலையில் நான்கரை அடி அளவில் நான்கரை லட்சம் மதிப்பில் நிறுவப்பட்ட சமண சமய துறவி மகாவீர் சிலை!
திருப்பத்தூர் ,மே 19 -
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏழைகளின் ஊட்டி என்று அழைக் கப்படும் ஏலகிரி மலையில் எ.ஆர்.தங்க கோட்டை அமைக்கப்பட்டுள்ளது இந்த சுற்றுலா தளத்திற்கு பொதுமக்கள் அங்கு அதிக அளவு வருவது வழக்கமான ஒன்றாகும்.மேலும் இன்று ஞாயிற்றுக் கிழமை நன்னாளில் முதல்முறையாக சென்னை பல்லாவரத்தில் தொழிலதிபர் ராமமூர்த்தி மற்றும் எ.ஆர்.தங்க கோட் டை சார்பாகவும் நான்கரை அடி உயரத் தில் நான்கரை லட்சம் மதிப்பீட்டில் சமண சமயத் துருவி மகாவீரர் அவர்களின் சிலையை நிறுவி உள்ளனர் மேலும் இச்சிலையானது ஈகையும் அன்பும் இருப்பவர்களே பேரருளர்கள் என்ற பொன்மணியை உருவாக்கி உணர்த்திய வர் மகாவீரர் என அழைக்கப்படுகிறார் என தெரிவிக்கின்றனர்
இன்று இச்சிலையின் கண்களை
சென்னையைச் சேர்ந்த நந்தன் ஜி, நாஹேர் திறந்து வைத்தனர் மேலும் மகா வீரர் சிலைக்கு 18 வகையான அபிஷே கங்கள் பிரதிஷ்ட குருஜி பங்கேற்றி அவர் களால் சிறப்பு பூஜை செய்யப்பட்டது
இந்நிகழ்வில் அருள்முருகன் குழுமத்தின் தலைமை நிர்வாகி தேன்மொழி ராஜேஷ் கண்ணா மற்றும் ஏ.ஆர். தங்கப் கோட்டை யின் பொது மேலாளர் சசிகுமார் இவர் களின் அணியின் முன்னிலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது வருகை புரிந்த அனைவருக்கும் ஏ.ஆர். தங்க கோட்டை யின் சார்பாக அன்னதானம் வழங்கப் பட்டது.
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக