இரவு நேரங்களிலும் தனது பணியை செய்யும் இத்தலார் கிராம நிர்வாக அலுவலர்
நேற்று இரவு பத்து மணி அளவில் இத்தலார் பகுதியில் இருந்து பேலிதளா செல்லும் சாலையில் வீசும் சூறாவளி காற்றினால் மரம் சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இரவு நேரம் என்று கூட பொருட்படுத்தாமல் சம்பவ இடத்திற்கு வந்த இத்தலார் கிராம நிர்வாக அலுவலர் தினேஷ் குமார் மற்றும் மீட்பு குழுவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து உடனடியாக மரத்தை அகற்றி சுத்தப்படுத்தி சாலையை சீர் செய்து கொடுத்தார்கள். இத்தகைய செயலுக்கு ஊர் பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்..
தமிழக குரல் இணையத்தள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையத்தள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக