ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் அச்சங்குளத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட கூட்டுறவு நுட்பாலையின் செயல்பாடுகள் குறித்து தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர் காந்தி,. இன்று 06.05.2025 பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். துணிநூல் துறை இயக்குனர் லலிதா, ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா முத்து, பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் ஆகியோர்.உடன் இருந்தனர்.
ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு நுற்பாலையின் ஆறாவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் 1982 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் துவங்கப்பட்ட ஐந்து கூட்டுறவு நூற்பாலைகளில் ஒன்றாகும் இந்த ஆலை கமுதி தாலுகா அச்சங்குளம் கிராமத்தில் அமைந்துள்ளது. இம் மாவட்டத்தை சார்ந்த ஆதிதிராவிடர் மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் பொருட்டு இவ்வாலை நிறுவப்பட்டது
2012- 2013 ஆம் ஆண்டு கைத்தறி மற்றும் துணிநூல் துறை மானிய கோரிக்கையின் போது ஆலை நவீனமாக்கி மீண்டும் இயக்கிட திட்டம் அறிவிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் கூட்டுறவு நூற்பாலைகள் நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் இயங்கி வரும் ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு நூற்பலையின் இயந்திரங்கள் நவீனமாக அமைக்கப்பட்டு தமிழ்நாடு அரசின் வேட்டி சேலை மற்றும் திட்ட பள்ளி குழந்தைகளுக்கான பள்ளி சீருடை வழங்கும் திட்டம் மற்றும் பிரதமர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் தேவையான சிட்டா நூல்கள் முதலியவை 7170 மெட்ரிக் டன் நூல் இவ்வாலையில் தொழிலாளர்கள் நலம் காக்கும் பொருட்டு உற்பத்தி செய்யப்பட்டு அரசு நூல் கிடங்கில் மற்றும் பிரதமர் நெசவாளர் கூட்டு சங்கங்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது,
இவ்வாய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் தேசிய நெடுஞ்சாலைத் துறை சரவணன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மாரிமுத்து, துணி நூல் துறை இணை இயக்குனர் ச.செந்தில்குமார், துணை இயக்குனர், வி.கே.அனந்தகுமார், மண்டல துணி துணை இயக்குனர் (கரூர்) நூல் செ.தமிழ்ச்செல்வி, மண்டல துணை இயக்குனர் (மதுரை) க்கான திருவாசகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு நூற்பாலை செயலாட்சியர் /உதவி இயக்குனர் க.முருகையா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக