தூத்துக்குடியில் நடந்த மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற ராசையா வாலிபால் கிளப் அணியினருக்கு கோப்பையை அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்
தூத்துக்குடி சின்னமணி நகர் பாய்ஸ் கிளப் சார்பில் முதலாம் ஆண்டு முன்னாள் மாவட்ட கைப்பந்து கழக தலைவர் டி உதயசங்கர் நினைவு கோப்பை காண மாநில அளவிலானகைப்பந்து போட்டி 2 நாட்கள் தூத்துக்குடி சின்னமணி நகர் விளையாட்டு மைதானத்தில் நடந்தது
இப் போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து 30 அணிகள் கலந்து கொண்டனர் முதல் நாள் போட்டியை மாநகராட்சி மேயர் என்.பி. ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்
2வது நாள் நடந்த இறுதிப் போட்டியில் முதலில் சி எம் என் நகர் வாலிபால் கிளப் அணியும். சென்ட் அந்தோணி கிளப் அணியும் மோதினார்கள் இதில் 4வது இடத்தை சி எம் என் நகர் அணியும் 3வது இடத்தை சென்ட் அந்தோணி அணியும் பிடித்தது
அதன் பின் நடந்த இறுதிப் போட்டியில் தூத்துக்குடி பி. ராசையா வாலிபால் கிளப் அணியும் கன்னியாகுமரி கன்னியாகுமரி கருமன் குடல் அணியும் மோதினார்கள் இதில் தூத்துக்குடி ராசையா வாலிபால் கிளப் அணி வெற்றி பெற்று முதல் இடத்தை பிடித்தது
அதன்பின் நடந்த பரிசளிப்பு விழாவிற்கு தொழில் அதிபர் டி வேல்சங்கர் தலைமை தாங்கினார் மாநகராட்சி கவுன்சிலர்கள் சந்திரபோஸ். பொன்னப்பன் ஆகியோர் முன்னிலை வைத்தார்கள் சி எம் என் கிளப் மூத்த உறுப்பினர் கந்தசாமி செல்லையா வரவேற்புரை ஆற்றினார் இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் பி கீதா ஜீவன் வெற்றி பெற்ற தூத்துக்குடி ராசையா வாலிபால் கிளப் அணிக்கு
டி .உதயசங்கர் நினைவு கோப்பையும் ரூ25000 ரொக்க பணமும் வழங்கி சிறப்புரை ஆற்றினார்
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து கழக தலைவர் டி .ஜான் வசீகரன் செயலாளர் எஸ். ரமேஷ் குமார் மாநகர திமுக செயலாளர் எஸ். ஆர்
ஆனந்த சேகரன் மாவட்ட கலை இலக்கிய அணி செயலாளர் ஜீவன் ஜேக்கப்.தொழிலதிபர் என் .ஆர். தினகரன் எம். முருகேஷ். ஆர் .எல். ராஜா .பிராங்கிளின். சி. எம் என். பாய்ஸ் வாலிபால் கிளப் தலைவர் எஸ் .ராஜா. செயலாளர் எஸ் .சச்சின் பெல் .பொருளாளர்.. எ .அருண்குமார் துணைத் தலைவர்கள் மணிகண்டன். அஸ்வின் குமார்.
துணை செயலாளர்கள் வெங்கடேஷ். மோகன் குமார். மற்றும் நிர்வாகிகள் யோகராஜ். பாலகணேஷ். ரமேஷ். கார்த்திகேயன் .காளிராஜன். ரமேஷ். தனபால். முருகேசன் .புஷ்பராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் இதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி கவுன்சிலர் சி எம் என் நகர் கிளப் ஒருங்கிணைப்பாளர் சந்திரபோஸ் சிறப்பாக செய்திருந்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக