எந்த பேருந்து எந்த ஊர்களுக்கு செல்கிறது என்பதை பேருந்து நிலைய கட்டிடத்தில் எழுதப்பட்டு இருக்கும் ஊர் பெயர்களை வைத்து எளிதில் புரிந்து கொண்டு அந்த பேருந்தில் பயணிகள் ஏறி செல்வார்கள். பேருந்துகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட (ஊர் பெயர் எழுதிய இடம்) இடத்தில் நிறுத்தி வைக்கப்படும்.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் பெருந்தலைவர் காமராஜர் பேருந்து நிலைய கட்டிடத்தில் பேருந்துகள் நிறுத்தி வைக்கும் இடத்திலிலும் ஊர் பெயர் எழுதப்பட்டு இருந்தது. தற்போது சில ஆண்டுகளுக்கு முன்பு வண்ணம் பூசப்பட்டது.
அப்போது ஊர் பெயர் அழிக்கப்பட்டு விட்டது. அதன்பிறகு ஊர் பெயர் எழுதவில்லை. பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு ராதாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் ராதாபுரம் காமராஜர் பேருந்து நிலையத்தில் ஊர் பெயர் எழுத நடவடிக்கை எடுக்க வேண்டுமென ராதை காமராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக