நீலகிரி மாவட்டம் உதகைக்கு உட்பட்ட சோலூர் பேரூராட்சி அருகில் அமைந்துள்ள சாண்டி நல்லா பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டின் கூரையின் மேல் மரம் விழுந்துள்ளது.. மீண்டும் வீசும் சூறாவளி காற்றினால் மறுபடியும் மரம் வீட்டின் கூரையின் மேல் விழுந்தது மற்றும் மின் இணைப்பு கம்பம் சாய்ந்து சாலையில் விழுந்தது உள்ளது.. இதனால் அங்கு வாழும் மக்கள் அச்சத்துடன் வாழ்கிறார்கள் என தெரிகிறது .மின் துண்டிப்பு நிலையில் உள்ளதால் எவ்வித பாதிப்பும் இல்லை.. பாதிப்பு ஏற்படும் முன் தீயணைப்புத் துறையினரும் மின்சாரத்துறையினரும் சம்பவ இடத்திற்கு சென்று உடனடியாக சரி செய்து நடவடிக்கை எடுக்குமாறு ஊர் பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக