எமரால்டு உதவி ஆய்வாளருக்கு எஸ் பி பாரட்டு
நீலகிரி மாவட்டம் உதகைக்கு உட்பட்ட எமரால்டு காவல் நிலையத்தில் போதைப் பொருட்களை தடுக்கும் வகையில் கடந்த மாதம் நீலகிரியில் தடை செய்யப்பட்டுள்ள ஹான்ஸ் குட்கா போன்ற போதை பொருட்களை அத்துமீறி விற்பனை செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறப்பாக செயல் பட்டதால் எமரால்டு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு கார்த்திக் அவர்களுக்கு நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா அவர்கள் சான்றிதழ் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார். சிறப்பாக செயல்பட்டு சான்றிதழ் பெற்ற நமது உதவி ஆய்வாளர் அவர்களுக்கு தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்
தமிழக குரல்இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக