குடியாத்தம் தொகுதி அண்ணா ஆட்டோ ஓட்டுனர்கள் தொழிற் சங்கத்தின் சார்பில் புதிய ஆட்டோ ஓட்டுனர் சங்க துவக்க விழா!
குடியாத்தம் ,மே 1
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தொகுதி அண்ணா ஆட்டோ ஓட்டுனர்கள் தொழிற் சங்கத்தின் சார்பில் புதிய ஆட்டோ ஓட்டுனர் சங்க துவக்க விழா இன்று 1.5.25 வியாழக்கிழமை காலை 10.00 மணியளவில் புதிய பேருந்து நிலையம் அருகில் தலைவர் மேகநாதன் தலைமை யில் நடைபெற்றது நகர கழக செயலாளர் J.K.N.பழனி வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சிக்கு மாவட்ட கழக துணைச் செயலாளர்கள் கஸ்பா மூர்த்தி, அமுதா சிவப்பிரகாசம், வனராஜ் வழக்கறிஞர் பூபதி, தட்சிணாமூர்த்தி நடிகர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் ஆவின் பெருந்தலைவர் த.வேலழகன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய சங்கத்தினை துவக்கி வைத்து இனிப்புகள் வழங்கி சிறப்புரையாற்றினர்
நிகழ்ச்சியில் புதிய சங்க நிர்வாகிகள் ராஜா தணிகாசலம் சகாயராஜ் குப்புசாமி ஜானகிராமன் கண்ணன் மற்றும் கழக நிர்வாகிகள் ரவிச்சந்திரன் அமுதா கருணா, சுந்தரேசன், அன்வர் பாஷா, அட்சயா வினோத்குமார், தேவராஜ் மகாலிங்கம், மோகன்ராஜ், சேவல் நித்தியானந்தம் நகர மன்ற உறுப்பி னர்கள் லாவண்யா குமரன், ரேவதி மோகன், சிட்டிபாபு உட்பட கழக நிர்வாகிகள் சார்பணி நிர்வாகிகள் ஆட்டோ ஓட்டுனர் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக