அரசு பாரத் நெட் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டின் 12,525 கிராமங்களில் அதிவேக இணைய சேவை வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆத்தூர் சுற்று வட்டார கிராமங்களில் ஒரு வருடத்திற்கு முன்பே இப் பணிநடந்து முடிந்து விட்டது. இணைப்பு வழங்கப்படவில்லை.
அவசர அவசரமாக நடந்த இப்பணியின் போது சிறப்பு அனுமதி பெற்று மின் கம்பங்கள் வழியாக பைபர் ஆப்டிகல் கேபிள் கொண்டு செல்லபட்டது.இந்த கேபிளின் கனம் அதிகம் என்பதோடு மின்கம்பங்களுக்கு இடையே இடைவெளி அதிகம் என்பதால் பாரம் தாங்காமல் ஆத்தூரை சுற்றி பல இடங்களில் மின்கம்பத்தில் இருந்து கேபிள் அருந்து தொங்கி கொண்டுள்ளது.சமீபத்தில் ஆத்தூர் மெயின் பஜாரில் விழுந்து கிடந்த கேபிளை சுற்றி வைத்து விபத்து ஏற்படும் அபாயத்தில் இருந்து சமூக ஆர்வலர்கள் பாதுகாத்தனர்.
இந்த ஆண்டுக்குள் இணைப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்திருப்பதால் கேபிளை பழுது பார்க்கும் போது இனியாவது தகுந்த பாதுகாப்போடு கொண்டு செல்ல வேண்டும் தற்போது விபத்து அபாயம் உள்ள இடங்களில் தரையில் கிடக்கும் கேபிளை அப்புறப்படுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக