தண்ணீர் தராமல் மறுக்கும் அரசு அதிகாரிகளை கண்டித்து ஸ்ரீவைகுண்டம் வடகால் அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பாக புதுக்கோட்டையில் தேசிய நெடுஞ்சாலை யில் மாபெரும் சாலை மறியல் போராட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு.
மாவட்ட ஆட்சியர் அரசு அதிகாரிகள் பொதுப்பணி துறை அதிகாரிகள் மேலும் மந்திரி அனைவரிடமும் மனு கொடுத்தும் மே 18ஆம் தேதி குறைந்த அளவே தண்ணீர் திறந்து இருப்பதால் அந்தத்தண்ணீரும் ஏறலை தாண்டி குறைவாகவே வந்துள்ளதுபதினொருமடை உள்ள குளங்களில் இன்னும் மூன்று மடைகளுக்கு மட்டுமே குறைந்த அளவு தண்ணீர் வந்துள்ளதால் சுமார் 30 கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் பேய்குளம், பெட்டைகுளம், கோரம்பள்ளம் குளம் ஆகிய குளங்களுக்கு தண்ணீர் இல்லாததால் சுமார் 500 கிராமங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடும், ஆடு மாடுகளுக்கு குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டு இருக்கிறது சுமார் 8,500 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள வாழைகள் கருகி கொண்டு இருக்கிறது . விவசாயிகள் கண்ணீர் விடுகின்றனர் அ னைகளிலும் போதுமான தண்ணீர் உள்ளது ஆனால் இது குறித்துமாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் வருகின்ற ஜூன் மாதம் இரண்டாம் தேதி தூத்துக்குடி திருநெல்வேலி தேசிய நெடுஞ் சாலையில் புதுக்கோட்டை தட்டப்பாறை சந்திப்பில் அனைத்து வடகால் விவசாயிகள் சங்கத்தின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமும், சாலை மறியல் போராட்டம் நடத்தப் போவதாக இன்று பேய்குளம் நிழச்சு வாழ்ந்தார்கள் அபிவிருத்தி சங்கத்தில் நடைபெற்ற அனைத்து விவசாய சங்க கூட்டமைப்பின் தலைவர்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக