பந்தலூர் அருகே பாக்கனா பகுதியில் இலவசம் பொது மருத்துவம் மற்றும் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், மேங்கோரேஞ் மருத்துவமனை, பந்தலூர் காசநோய் தடுப்பு பிரிவு, பாக்கனா பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்றம் ஆகியன சார்பில் இலவச பொது மருத்துவம் மற்றும் இலவச கண் சிகிச்சை முகாம், காசநோய் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் விக்னேஸ்வரன் தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித், பள்ளி குடிமக்கள் நுகர்வோர் மன்ற பொறுப்பு ஆசிரியர் சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் செயலாளர் சிவசுப்பிரமணியம் முகாமை துவக்கி வைத்தார்
நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க உதகை மருத்துவ கல்லூரி கண் மருத்துவ அலுவலர் இமாம், மருத்துவர்கள் ஜோதி, ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் அடங்கிய மருத்துவ குழுவினர் கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை அளித்தனர்.
மேங்கோரஞ் மருத்துவமனை மருத்துவர் ஷர்மிளா, மருந்தாளுனர் ரமேஷ், முரளிதரன் உள்ளிட்டோர் அடங்கிய மருத்துவ குழுவினர் பொது மருத்துவ சிகிச்சை அளித்தனர்.
பந்தலூர் காசநோய் பிரிவு மேற்பார்வையாளர் விஜயகுமார் களப்பணியாளர்கள் நிர்மலா, ராமநாதன் ஆகியோர் அடங்கிய காசநோய் பிரிவினர் காசநோய் பரிசோதனை எடுத்தனர்.
நிகழ்ச்சியில் பாக்கனா பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
இதில் 20க்கும் மேற்பட்டோருக்கு கண் புரை இருப்பது கண்டறியப்பட்டு 10 கண் புரை அறுவை சிகிச்சைக்கு உதகை மருத்துவ கல்லூரிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
காசநோய் பிரிவில் 50க்கும் மேற்பட்டோர் எக்ஸ்ரே எடுத்தனர். 10 பேருக்கு சளி மாதிரி பெறப்பட்டுள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செயலாளர் விஷ்ணு தாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக