நீலகிரி மாவட்டம் கூடலூர் மார்னிங் ஸ்டார் மேல்நிலை பள்ளியில் 11வது வாசனை பொருட்கள் கண்காட்சி இன்று துவங்கியது.
வாசனை பொருட்கள் கண்காட்சி மே மாதம் 9 ஆம் தேதி இன்று துவங்கி 10 மற்றும் 11 மூன்று நாட்கள் நடைபெறும்.
வாசனை பொருட்கள் கண்காட்சியை மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு. பெ சுவாமிநாதன் நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., தலைமையில் துவக்கி வைத்தார்,
இந்நிக்ச்சியில் மாண்புமிகு கா.ராமச்சந்திரன் அரசு தலைமை கொறடா, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா இ.கா.ப., கூடலூர் கோட்டாட்சியர் சங்கீதா இ. ஆ.ப., கூடலூர் நகர்மன்ற தலைவர் திருமதி. பரிமளா, தோட்டக்கலை துறை இணை இயக்குனர் திருமதி. ஷில்பா , மற்றும் தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் திருமதி.ஜெயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செயலாளர் விஷ்ணு தாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக