சாய்பாபா காலனி மேம்பால பணிகளுக்காக இரவு நேரம் - இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை போக்குவரத்து மாற்றம் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 26 ஜூன், 2025

சாய்பாபா காலனி மேம்பால பணிகளுக்காக இரவு நேரம் - இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை போக்குவரத்து மாற்றம்


கோவை மேட்டுப்பாளையம் சாலையில் நடைபெறும் சாய்பாபா காலனி மேம்பால பணிகளுக்காக இரவு நேரம் -  இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யபடுகிறது.....!!!


கோவை மாநகரில் உள்ள முருகன் மில்ஸ் முதல் எருக்கம்பெனி வரை உயர்மட்ட மேம்பால கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணியில் எருக்கம்பெனி முதல் சிவானந்தா காலனி சந்திப்பு வரை கான்கிரீட் தூண்களின் மீது Girder Beam-கள் பொருத்தும் பணிகள் நடைபெற உள்ளது.


எனவே 23.06.2025 முதல் 20.07.2025 வரை 28 நாட்களுக்கு மட்டும் இரவு 11.00 மணி முதல் காலை 05.00 மணிவரை போக்குவரத்தில் மாற்றம் அமலில் இருக்கும். எனவே பொது மக்கள் மாற்று பாதையில் செல்ல அறிவுறுத்தப்படுகிறது.


மாற்று பாதை :


வடகோவை வழியே வரும் வாகனங்கள் கவுண்டம்பாளையம் செல்லவேண்டும் என்றால் அவினாசிலிங்கம் இன்ஸ்டிடியூட் - பாரதி பார்க் சாலை வழியே கணுவாய்- தடாகம் சாலை - இடையார்பாளையம் வழியே வந்து கவுண்டம்பாளையம் வந்து பிற இடங்களுக்கு செல்லலாம்.


கவுண்டம்பாளையத்திலிருந்து அவினாசிலிங்கம் பல்கலைக்கழகம் நோக்கி செல்லும் வாகனங்கள் சங்கனூர் பாலம் அருகே உள்ள சங்கனூர் சாலை வழியாக திருப்பி விடப்படும். அங்கிருந்து காந்திபுரம் உள்ளிட்ட பிற இடங்களுக்கு செல்லலாம்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad