வேலூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 10 தமிழ்நாடு பேரூராட்சி நகராட்சி மாநக ராட்சி அனைத்து ஓய்வூதியர் நல அமைப் பின் முதல் மாநில மாநாடு !
வேலூர் , ஜூன் 3 -
வேலூர் மாவட்டம் தமிழ்நாடு பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி அனைத்து ஓய்வூ தியர் நல அமைப்பின் முதல் மாநில மாநாடு 2025 ஆகஸ்ட் 10 அன்றுவேலூரில் நடைபெற உள்ளது. இதற்கான வரவேற் புக்குழு அமைப்பு கூட்டம் வேலூர் பெல் லியப்பா கூட்ட அரங்கில் மாநில ஒருங் கிணைப்பாளர் பா.ராமமூர்த்தி தலைமை யில் நடைபெற்றது. வேலூர் மாநகராட்சி ஓய்வூதியர் நல அமைப்பின் தலைவர் எஸ்.பன்னீர்செல்வம், செயலாளர் வீ.செல்வராஜ் முன்னிலை வகித்தனர்.
மாநில நிதி காப்பாளர் எஸ்.கனகராஜ் வரவேற்று பேசினார். கூட்டத்தில் அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநில பொதுச்செயலாளர் பி.கிருஷ்ண மூர்த்தி நிறைவுரையாற்ற, அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநில துணைத்தலைவர் டி.குப்பன் துவக்க உரையாற்றினர்.அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநில துணைத் தலைவர் ஆர்.சுப்பிரமணி, மாவட்ட தலைவர் எம்.பன்னீர் செல்வம், ஊரக வளர்ச்சித்துறை ஓய்வூதியர் சங்க மாநில பொதுச்செயலாளர் பா.ரவி, தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க முன்னாள் மாநிலத்தலைவர் அ.சேகர், வருவாய் துறை அலுவலர் சங்க மாநில துணை பொதுச்செயலாளர் டி.டி.ஜோஷி, பா.வேலு (ஊரக வளர்ச்சித்துறை), ச.ஹேமசந்திரன் (அரசு ஊழியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர்), எஸ்.பரசுராமன் (இந்திய தொழிற்சங்க மையம்), எஸ்.டி.சங்கரி (ஜனநாயக மாதர் சங்கம்), ஜி.கணேஷ்வரன் (வேலூர் மாநகராட்சி ஓய்வூதியர் நல அமைப்பு), பி.ஞானசேகரன் (அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம்) வாழ்த்துரை வழங்கினர்.
மாநாட்டு வரவேற்புக்குழு தலைவராக எம்.பன்னீர்செல்வம், செயலாளராக வீ.செல்வராஜ், பொருளாளராகஎஸ்.கனக ராஜ், இணை பொருளாளராக ஏ.தேவ குமார் மற்றும் வரவேற்பு குழுவில் ஓய்வுபெற்ற பள்ளிக்கல்லூரி ஆசிரியர் நலச்சங்க அமைப்பாளர் செ.நா.ஜனார்த் தனன் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலா ளர் ஆ.ஜோசப் அன்னையா மற்றும் 25 துணைத் தலைவர்கள், 20 இணைச் செயலாளர்கள், 15 செயற்குழு உறுப்பி னர்கள் மற்றும் 11 சிறப்பு ஆலோசகர்கள் உள்ளிட்ட 75 பேர் கொண்ட வரவேற்புக் குழு அமைக்கப்பட்டது.இறுதியாக மாநில ஒருங்கிணைப்புகுழு உறுப்பினர் ஏ.தேவகுமார் நன்றி கூறினார்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக